For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பேத்தின்னு தூக்கி சுமந்ததுக்கு நல்லா வேணும்.. கேபி இப்போ டம்மி மம்மி பக்கம்.. டென்ஷனான தாத்தா!

  |

  சென்னை: பேத்தின்னு தூக்கி சுமந்த சுரேஷ் தாத்தாவுக்கு இன்னும் நல்லா வேணும். நேத்து எபிசோட்ல கேபி வச்சு செஞ்சிட்டாங்க..

  சம்யுக்தா தனியா ஒரு குட்டி குரூப்பையே உருவாக்கி வச்சிருக்கிறது நேத்து பச்சையாவே தெரியுது.

  பாலாஜி, கேபி, ஷிவானி எல்லாமே அவங்க டீம் தான். அதுக்குத்தான் தலைவர் டேகை பயன்படுத்தி கேபிக்காக வாதாடுனாங்க, சொல்லப் போனா சுச்சியும் இப்போ அவங்க கேங் தான்.

  தாத்தாவுக்கும் பேத்திக்கும் பஞ்சாயத்து

  தாத்தாவுக்கும் பேத்திக்கும் பஞ்சாயத்து

  சனம் ஷெட்டி - பாலா, சனம் - சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி - சம்யுக்தா, சோமசேகர் - பாலா வழக்குகள் எல்லாம் கைதூக்கும் முறையில் தீர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், கடைசியாக சுரேஷ் தாத்தாவுக்கும் கேபிக்கும் இடையேயான காமெடி வழக்கு சீரியஸாக போய் முடிந்தது தான் நேற்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்.

  ஓவரா ரியாக்ட் பண்றாரு

  ஓவரா ரியாக்ட் பண்றாரு

  எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், சுரேஷ் தாத்தா ஓவராக ரியாக்ட் பண்ணுகிறார் என்கிற குற்றச்சாட்டையும், மத்தவங்க பிரச்சனையின் போது, தன்னை அவர் திட்டியதாகவும் வழக்கு தொடுத்து இருந்தார். கேபி, தன் மேல கொடுத்த குற்றச்சாட்டுகளால் கடுப்பான சுரேஷ் தாத்தா கேபி மீது கோபித்துக் கொண்டார்.

  நன்றி மறந்த கேபி

  நன்றி மறந்த கேபி

  யாருமே இந்த பிக் பாஸ் வீட்டில் கேபி பக்கம் நிற்காத போது, வயதான சுரேஷ் சக்கரவர்த்தி, கேபியை தனது சொந்த பேத்தியாக நினைத்து அவரை தூக்கி சுமந்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றார். ஆனால், கொஞ்சமும் நன்றியே இல்லாமல் டம்மி மம்மி சம்யுக்தா பக்கம் சேர்ந்து கொண்டு, பாலாவுக்காக சுரேஷ் சக்கரவர்த்தியை கேபி டார்கெட் செய்தது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.

  ரம்யா, ரியோ சூப்பர்

  ரம்யா, ரியோ சூப்பர்

  இந்த நீதிமன்றம் டாஸ்க்கில் ஜட்ஜ் சுசித்ரா வெறும் டம்மி டப்பாசு தான். பாலாஜி, ஆரி, சம்யுக்தா எல்லாமே தனிப்பட்ட வஞ்சத்தை கொட்டித் தீர்த்தனர். யார் கூடவும் பிரச்சனையில்லாமல், அவ்வளவு களேபரத்திலும் நிகழ்ச்சியை கூலாக கொண்டு சென்றது என்றால், ரம்யாவும் ரியோ ராஜும் தான். ரியோ இப்போ தான் அவரோட சூப்பரான கேமை ஆட ஆரம்பித்துள்ளார். அசத்துங்க!

  வயித்துவலி

  வயித்துவலி

  கேபி பக்கம் நின்று பேசிய ரியோ ராஜ், ரம்யா சொன்ன பாயிண்ட்டை மறுபடியும் வாங்கிக் கொண்டு யார் கூட வயித்துவலியோ அவங்க கூட சண்டை போடாம சும்மா போன என் கட்சிக் காரரை ஏன் திட்டினார் என செம காமெடியாக பேச, ரம்யா பாண்டியனும் வழக்கம் போல் க்யூட் ஸ்மைலுடன் சுரேஷ் தாத்தாவுக்கு பிரச்சனைன்னா நேரா பிக் பாஸ் கிட்டயே பேசிடுவார் என்றார்.

  ஃபேவரிசம் பண்ண சம்யுக்தா

  ஃபேவரிசம் பண்ண சம்யுக்தா

  ரியோ ராஜும், ரம்யா பாண்டியனும் தங்களது இறுதி வாக்குவாதத்தை வைத்துக் கொண்டு இருக்கும் போது, தேவையில்லாமல் உள்ளே நுழைந்த சம்யுக்தா, தலைவி டேக்கை பயன்படுத்திக் கொண்டு, கேபிக்கு ஆதரவாக ஃபேவரிசம் பண்ணாங்க, உடனே சுசித்ரா அதற்கு அனுமதி கொடுத்ததை ரம்யா கண்டிக்க, சுரேஷ் தாத்தா சம்யுக்தா மீது செம கடுப்பாகிட்டார்.

  துப்பறிவாளன் 2 படத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலம் | Top Five Beats - வீடியோ
  காலில் போட்டு இருக்கிறதை கழட்டி அடி

  காலில் போட்டு இருக்கிறதை கழட்டி அடி

  வழக்கை விசாரித்த சுசித்ரா, சம்யுக்தா சொன்ன குசும்பு பாயிண்ட்டை முன் வைக்க பலரும் தாத்தாவுக்கு எதிராக கை தூக்கினார்கள். உடனே தீர்ப்பை கேபிக்கு சாதகமாக சுச்சி வழங்கி விட்டார். வெளியே வந்த தாத்தா, இனி உன் கிட்ட பேச மாட்டேன். அப்படியே பேச வந்தா உன் காலில் போட்டு இருக்கிறதை கழட்டிட்டு அடி என கேபியை வெறுத்து ஒதுக்கினார்.

  English summary
  Suresh Chakaravarthy got tensed over Samyuktha interfere and do favorism for Gabriella in court scene.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X