For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சுரேஷ் சொன்ன குரூபிஸம் உண்மைதான் போல.. இந்த வயசுல கேபியை தூக்கி சுமந்து அசத்திட்டாரு போங்க!

  |

  சென்னை: இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தியை பிடிக்காதவங்களுக்கு கூட நிச்சயம் இந்த புரமோவை பார்த்தா பிடிக்க ஆரம்பித்து விடும்.

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் முதல் நாளில் இருந்தே, இந்த கேமை நல்லா விளையாடுறாருய்யா இந்த மனுஷன் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

  தற்போது வெளியாகி உள்ள 2வது புரமோவை பார்த்தாலே குரூபிஸம் பிக் பாஸ் வீட்டில் தலைவிரித்தாடுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

  '’எவன் அவன்’’ ஒருமையில் கேட்ட விஜே அர்ச்சனா.. காண்டான சுரேஷ் சக்கரவர்த்தி !

  டிரெண்டிங் அவார்டு

  டிரெண்டிங் அவார்டு

  மொட்டை தல என்றும், மாமா என்றும் தாத்தா என்றும் எப்படி கலாய்த்தாலும் சுரேஷ் சக்கரவர்த்தி இந்த சீசனின் சூப்பரான போட்டியாளர் என்பது நிதர்சனம். அதனால், தான் அர்ச்சனா உள்ளே வந்தவுடன் டிரெண்டிங் அவார்டை அவருக்கு கொடுத்தார். எல்லா நாட்களிலும், எல்லா ஆட்களுடனும் பட்டையை கிளப்பி விளையாடி வருகிறார்.

  வேற லெவல் ஆட்டம்

  வேற லெவல் ஆட்டம்

  அனிதா சம்பத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த சுரேஷ் சக்கரவர்த்தி, சின்ன மச்சான் செல்ல மச்சான் பாட்டுக்கு அவருடன் சேர்ந்து போட்ட ஆட்டம் தான் பிக் பாஸ் பிரம்மாண்ட டான்ஸ் ஷோவின் சிறப்பான நடனம். ஆட்டம் போட்டது மட்டுமின்றி ஒவ்வொரு போட்டியாளர்களின் ஆட்டத்தை கிண்டல் செய்து ஆட்டமும் காண வைத்தார்.

  பாகுபலி சிலையைவிட உயர்வு

  பாகுபலி சிலையைவிட உயர்வு

  இன்றைய நிகழ்ச்சிக்கான 2வது புரமோவிலும் சுரேஷ் சக்கரவர்த்தி பாகுபலி சிலையை போல உயர்ந்து நிற்கிறார். கேபிக்கு யாருமே ஆதரவு தராத நிலையில், தனி ஒருவனாக இந்த வயதிலும், அவரை தூக்கி சுமந்து வலியோடு வியர்த்து கொட்டும் காட்சிகளை புரமோவில் பார்க்கும் போதே புல்லரித்து விட்டது.

  குரூபிஸம் பச்சையா தெரியுது

  குரூபிஸம் பச்சையா தெரியுது

  வேல்முருகனை தோளில் சுமக்கும் ஆரிக்கு உறுதுணையாக ரேகா, சனம் ஷெட்டி, அர்ச்சனா மற்றும் சம்யுக்தா சுத்தி நிற்கின்றனர். அதே போல, ரியோவை தூக்கி சுமந்து நிற்கும் பாலாஜியை சுற்றி நிஷா, அனிதா, ரம்யா பாண்டியன் மற்றும் ஆஜீத் உள்ளனர். கேபிக்கு சுரேஷ் மட்டும் ஒத்தை ஆளா உதவி செய்யுறாரு, இதை பார்த்தாலே குரூபிஸம் பச்சையா தெரியுது.

  ப்ளீஸ் தாத்தா

  ப்ளீஸ் தாத்தா

  கேபி ஒல்லியா இருந்தாலாவது சுரேஷ் ஈஸியா தூக்கி ரொம்ப நேரம் நிப்பாரு.. ஆனால், கேபியோ இப்போ கொஞ்சம் வெயிட் போட்டுட்டாங்க.. அதனால், வியர்வை வழிந்து உடல் சோர்வடைந்து தூக்க முடியாமல் கேபியை இறக்கி விட்டார் சுரேஷ். ப்ளீஸ் தாத்தா, பண்ணலாம் தாத்தா என கேபி கெஞ்சியும் அவரால் முடியாததால், தனக்காக போராடிய அவரது தைரியத்தை பார்த்து கட்டித் தழுவி அழுத காட்சிகள் ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி வருகின்றன.

  கமல் கேட்பாரா

  கமல் கேட்பாரா

  பிக் பாஸ் தமிழ் 4 வீட்டுக்குள் குரூபிஸம் இருக்கு என்கிற குற்றச்சாட்டை மொட்டை தல சுரேஷ் சக்கரவர்த்தி எழுப்பி உள்ள நிலையில், இன்றைய புரமோவும் அதை உறுதி செய்துள்ளது. இதனால், நாளைய நிகழ்ச்சியில் கமல் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்கள் ஏன் குரூபிஸத்தை பின்பற்றுகின்றனர் என கமல் கேட்டு வெளுப்பாரா? இல்லை வேடிக்கை பார்ப்பாரா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

  English summary
  Bigg Boss Tamil 4 Day 12 promo 2 out now. Suresh Chakaravarthy lifts Gabriella and stole several Bigg Boss Tamil fans hearts.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X