For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி.. சோகத்தில் ரசிகர்கள்!

  |

  சென்னை: ஒர் நல்ல கலைஞனுக்கு எப்போதுமே ரசிகர்கள் ராயல் சல்யூட் அடிப்பது வழக்கம்.

  நீதிபதியாக சுச்சி செய்தது தவறு, கமல்ஹாசன் வருத்தம் | Bigg boss 4 Tamil

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வமாக வெளியானதும் சமூக வலைதளங்களில் #SureshChakravarthi என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி பிக் பாஸ் ரசிகர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

  ரேகா, வேல்முருகன் எல்லாம் வெளியே போகும் போது, ஓவென அழுது ஒப்பாரி வைத்த போட்டியாளர்கள் எல்லாம், டஃப் ஆன ஆளு வெளியே போயிட்டார், கப்பு நமக்கு தான் என சிரிப்புடன் இருப்பதை பார்ப்பதற்கும் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது.

  அர்ச்சனாவாக மாறிய ஆரி.. பாலாஜி நீ என் தம்பி டா.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டா.. முடியல!

  பிக் பாஸை பிடிக்க வைத்தார்

  பிக் பாஸை பிடிக்க வைத்தார்

  இந்த சீசனில் ஆண் போட்டியாளர்கள் ரொம்பவே வீக்கா இருக்காங்களே என்கிற பேச்சுக்கு நடுவே, வயசானாலும், ஸ்டைலும் திறமையும் கொஞ்சமும் மாறாது என்பதை அழகாக நிரூபித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வைத்தவர் சுரேஷ் தாத்தா தான்.

  கில்லாடி கிங்

  கில்லாடி கிங்

  பர்ஃபார்ம் என்று வந்து விட்டால் மனுஷன் தனது வயதை மறந்து இறங்கி அடித்து ஆடி கலக்குவதை கடந்த ஒரு மாதமாக பிக் பாஸ் ரசிகர்கள் நல்லாவே கண்டு ரசித்தனர். பிக் பாஸையே கலாய்ப்பது, கொளுத்திப் போடுறேன் என சொல்லியே கேம் ஆடிய கில்லாடி கிங் நம்ம மொட்டை தல சுரேஷ் தாத்தா தான்.

  அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  சுரேஷ் சக்கரவர்த்தி தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் என்கிற தகவல் இரு தினங்களுக்கு முன்னதாகவே கசிந்து விட்ட நிலையில், கமல் தனது பிறந்தநாள் ஷோவில் ட்விஸ்ட் எல்லாம் வைக்கப் பார்த்து, அது தோல்வியை தழுவியது. கடைசியில், சோமசேகர், சனம், சுரேஷ் மூவர் இருக்க, சுரேஷ் வெளியேறுகிறார் என கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

  மிராக்கிள் நடக்காதா

  மிராக்கிள் நடக்காதா

  கடைசி வரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் ஏதாவது மிராக்கிள் நடக்காதா? ரகசிய அறையில் சுரேஷ் தாத்தாவை வச்சிட மாட்டாங்களா? என ஏகபட்ட எதிர்பார்ப்புகளையும் இதுவரை எந்த போட்டியாளர்கள் மீதும் காட்டாத அன்பையும், அக்கறையையும் அவர் மீது காட்டினார்கள். ஆனால், கடைசி வரையில் அந்த மிராக்கிள் நடக்கவே இல்லை.

  பெரிய வாய்ப்பு காத்திருக்கு

  பெரிய வாய்ப்பு காத்திருக்கு

  பிக் பாஸ் வீட்டில் வயதானவர்களுக்கு எப்போதுமே மதிப்பில்லை. இளம் போட்டியாளர்களை வைத்துத் தான் கடைசி வரை விளையாடுவார்கள். இந்த நிகழ்ச்சி இல்லை என்றாலும், சுரேஷ் சக்கரவர்த்திக்கு நிச்சயம் ஒரு பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என ஏகப்பட்ட ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.

  பை பை தாத்தா

  பை பை தாத்தா

  கடைசியாக கேபியாவது உங்களை கட்டிப் பிடித்து அழுது பை பை சொல்வார் என பார்த்தோம். அதுவும் நடக்கவில்லை. அர்ச்சனா அக்கா மட்டுமே மனதார அழுதார். மத்த எல்லாருமே கிழவன் கிளம்பினா நல்லது என்பது போலவே அசால்ட்டாகவே இருந்து விட்டனர். யாருக்கும் ஷாக்கிங்காகவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே வேறு வேறு வடிவங்களில் திரையில் உங்களை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

  English summary
  Suresh Chakaravarthy officially eliminated from Bigg Boss Tamil 4. Millions of Bigg Boss fans not accepting and feel bad for his sudden elimination.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X