மொட்டை தல விடமாட்டாரு போல.. இந்த புரமோ இன்னும் சூப்பர்.. அனிதாவை கம்மியாத்தான் ஹர்ட் பண்ணாராம்!

சென்னை: அனிதா சம்பத்தை எல்லாரும் டார்கெட் பண்ணி வந்த நிலையில், இரண்டாவது புரமோவில் மொட்டை தல சுரேஷ் தனது ஆட்டத்தை காண்பித்துள்ளார்.

Recommended Video

Who is this Suresh Chakrawarthi | Bigg boss 4

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் நான்காம் நாள் இரண்டாவது புரமோ இப்போ வெளியாகி வைரலாகி வருகிறது.

சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை பற்றிய கதையை சொல்லும் போது, அனிதா சம்பத்தை பகிரங்கமாக டீஸ் செய்து இருப்பது புரமோவின் ஹைலைட்.

மொட்ட மாமா

மொட்ட மாமா

சுரேஷ் சக்கரவர்த்தி ஆரம்பத்தில் இருந்தே ஷிவானியிடம் தானாக சென்று பாட்டுப் பாட சொல்லி கேட்டு, அடுத்த நாள், அவருடன் சண்டைக்கு நின்றார். பின்னர் அனிதா சம்பத்திடமும் சுரேஷ் சக்கரவர்த்தி சண்டைக்கு சென்றார். அதுமட்டுமின்றி நிஷா, சனம் உள்ளிட்ட பலரிடமும் சுரேஷ் சக்கரவர்த்தி வான்டட்டா வாலாட்டி வருகிறார்.

இவரும் சும்மா இல்லை

இவரும் சும்மா இல்லை

சுரேஷ் சக்கரவர்த்தியின் கேம் பிளானை தெரிர்ந்து கொண்ட அனிதா சம்பத், அவருடன் மோதினால் தான் நாமும் அடிக்கடி புரமோவில் வருவோம் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டு, அனிதா சம்பத்தும் ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். அவர் எதிர்பார்த்த படியே எல்லா புரமோக்களிலும் அவரும் சுரேஷும் தான் மாற்றி மாற்றி வருகின்றனர்.

சுரேஷ் சக்கரவர்த்தி கதை

சுரேஷ் சக்கரவர்த்தி கதை

ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் சொந்தக் கதை சோகக் கதையை சொல்லி பார்வையாளர்களையும் சக போட்டியாளர்களையும் அழ வைத்து வருகின்றனர். நம்ம மொட்ட மாமா சுரேஷ் சக்கரவர்த்தியின் ரவுண்டு வந்த நிலையில், மேடை ஏறி அவர் கதையை சொல்வார் என்று பார்த்தால், அங்கேயும் அனிதாவையே டார்கெட் செய்து பேசுகிறார்.

கம்மியா ஹர்ட் பண்ணியிருந்தா

கம்மியா ஹர்ட் பண்ணியிருந்தா

லவ் யூ ஆல் என பேசத் தொடங்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, யாரையாவது மனம் புண்படும் படி பேசியிருந்தா மன்னித்து விடுங்கள். ஹர்ட் பண்ணா கம்மியாத்தான் ஹர்ட் பண்ணியிருப்பேன். அதிகமா ஹர்ட் பண்ணா தாங்க மாட்டீங்க என அவர் பேச பேச, புரமோவில் அனிதா சம்ப்த் முகம் மிளாகாய் வெடிப்பது போல வெடிக்கிறது.

கடும் போட்டியாளர்

கடும் போட்டியாளர்

மேலும், சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் போது, இந்த ஷோவில் கடைசி வரை தான் ஒரு கடும் போட்டியாளராக இருப்பேன் என்றும் இந்த ஷோவில் யார் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி நான் பெற்றதாகவே எடுத்துக் கொள்வேன் என்றும் செம திமிராக பேசியுள்ளதை பார்த்த ரசிகர்கள், வில்லன் இவர் தான்.. அவசரப்பட்டு அனிதாவை திட்டிவிட்டோமே என ஃபீல் செய்து வருகின்றனர்.

அனிதா புகார்

அனிதா புகார்

சுரேஷ் சக்கரவர்த்தி எல்லா புரமோவிலும் வரவே இப்படி ஒவ்வொருவரிடமும் சண்டை இழுக்கிறார் என அனிதா சம்பத் சோமசேகருடன் புலம்பும் காட்சிகளையும் புரமோவின் இடையே இடையே எடிட் செய்து போட்டு ரசிகர்களின் பல்ஸை அதிகரித்துள்ளது விஜய் டிவி. இந்த காட்சிகளாவது இன்று போடுவீங்களா? இல்லை நாளை தானா என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X