காஞ்சனாவாக மாறிய மொட்டை சுரேஷ்.. என்ன ஒரு ஆட்டம்.. இப்போ வலிக்காதே.. அல்வா கொடுத்த பிக்பாஸ்!

சென்னை: மியூசிக்கல் சேர் போட்டியில் கடைசியாக சுரேஷ் தாத்தா தான் வெற்றிப் பெற்றார்.

சோமசேகர் அவுட்டான போதே, சுரேஷ் சக்கரவர்த்தி அந்த பாக்ஸை தொட்டு இருந்தார்.

ஆனால், பாலாஜி சப்போர்ட் பண்ணி தாத்தாவை அந்த போட்டியில் ஜெயிக்க வைத்தார். எல்லாத்துக்கும் மேல அவர் ஆடுன காஞ்சனா ஆட்டம் தான் அட்டகாசமே!

போட்டி இருக்கு

போட்டி இருக்கு

நாடா? காடா? டாஸ்க்கில் நடந்த பிரச்சனையை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டே போயிடுறேன் என கன்ஃபெஷன் ரூமில் கதறி கதறி அழுத சுரேஷ் தாத்தா, நேற்றைய பட்டிமன்றம் டாஸ்க்கில், எல்லாத்தையும் மறந்து விட்டு, இந்த வீடு போட்டி களம், போட்டி இருக்கு, கடினமான போட்டியாளரை எவிக்ட் பண்ணி வெளியேற்ற பலரும் பாடுபடுகின்றனர் என உண்மையை போட்டுடைத்தார்.

சுரேஷ் தாத்தாவுக்கு ஆதரவு

சுரேஷ் தாத்தாவுக்கு ஆதரவு

சனம் ஷெட்டியை லேசா தக்கையால் அடித்த சுரேஷ் தாத்தாவை சனம் ஷெட்டி கண்டபடி திட்டித் தீர்த்தார். அதற்காக அர்ச்சனாவின் ஆணைக்கிணங்க, பகிரங்கமாக இந்த வயசிலும் அவர் மன்னிப்புக் கேட்டார். ஆனால், சனம் ஷெட்டி இன்னமும் தான் பேசியதற்கு மன்னிப்பே கேட்கலை.. இதனால், சமூக வலைதளங்களில் சுரேஷ் தாத்தாவுக்கு ஆதரவு மட்டுமல்ல ஓட்டுக்களும் பெருகி வருகிறது.

நியாயம் கேட்ட ஆரி

நியாயம் கேட்ட ஆரி

நைட்டி எல்லாம் மாட்டி விட்டு நடிகர் ஆரியை அந்த டாஸ்க்கில் ரொம்பவே அசிங்கப்படுத்தினர். ஆனால், அவர் கூலாக இருப்பது போல, நடித்து நடனமாடினார். பின்னர், சுரேஷ் தாத்தா சோம்ஸிடம் தோற்கும் போது, அவர் அவுட்டாகல, சோம்ஸ் தான் அவுட் என பாலாஜி வம்பு பண்ணதும், கடுப்பான ஆரி, நியாயம் கேட்டார். ஆனால், ஆரியின் முயற்சி வீணானது.

காஞ்சனாவாக மாறிய தாத்தா

காஞ்சனாவாக மாறிய தாத்தா

சோமசேகர் அவுட்டான நிலையில், சுரேஷ் தாத்தாவை காஞ்சனா போல கெட்டப் போட்டு ஆட வேண்டும் என சொன்னதும், அர்ச்சனா, அனிதா எல்லாம் சேர்ந்து காஞ்சனா மேக்கப் போட்டு விட்டனர். துணி துவைக்கும் போது முதுகு வலி, இடுப்பு வலி என சீன் போடும் மொட்டை பாஸ், டாஸ்க் என்று வந்தால் காஞ்சனா பேயாகவே மாறி மிரட்டுகிறார்.

வின்னர் வின்னர் ஸ்வீட் டின்னர்

வின்னர் வின்னர் ஸ்வீட் டின்னர்

கடைசியாக அந்த மியூசிக்கல் சேர் போட்டியில், சம்யுக்தாவும், சுரேஷ் தாத்தாவும் விளையாடினர். வேல்முருகன் பாட்டை நிறுத்தும் போது, பாக்ஸ் சம்யுக்தா கையில் இருந்ததால், இந்த போட்டியில் சுரேஷ் சக்கரவர்த்தி வின் பண்ணார். அவருக்கான பரிசாக ஸ்வீட்ஸ் கொடுக்கப்பட்டது. அனைவரும் அதை பகிர்ந்து உண்டனர்.

நல்லவேளை சேவ் பண்ணல

நல்லவேளை சேவ் பண்ணல

இந்த டாஸ்க்கில் சுரேஷ் தாத்தா ஜெயித்தவுடன், கன்ஃபெஷன் ரூமில் அப்படி அழுத காரணத்தால், பிக் பாஸ் அவரை சேவ் பண்ண பிளான் பண்ணிட்டார் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர். கடைசியா நல்லா அல்வா கொடுத்து நேற்றைய எபிசோடை முடித்து வைத்தார் பிக் பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X