அடக்கம் வேணும்.. அருகதை இல்லை.. வனிதா விஜயகுமாரை டார் டாராக கிழித்து தொங்க விட்ட சுரேஷ் தாத்தா!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இமேஜ் போனது நெகட்டிவிட்டி வந்தது என சொல்லிக் கொண்டே அந்த சம்பளத்துக்காக மீண்டும் ஷோவுக்கு வந்து போட்டியாளர்கள் மொக்கை வாங்கி வருகின்றனர்.
நெட்டிசன்கள் ட்ரோல் செய்வதை விட பிக் பாஸ் டீம் செய்யும் ட்ரோல்கள் வேற லெவல் என்பதை உணர்ந்தே நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் கடைசியில் ரசிகர்களை மட்டுமே பிளேம் செய்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்விகள் கிளம்பி உள்ளன.
பாலாஜி முருகதாஸ் ஆரம்பித்து வைக்க சுரேஷ் தாத்தா வனிதா விஜயகுமாரை சும்மா ரவுண்டு கட்டி அடித்து வரும் புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

டம்மியான வனிதா
பிக் பாஸ் 3வது சீசனில் கில்லியாக இருந்த வனிதா விஜயகுமார் இந்த சீசனில் முதல் இரு நாட்களிலேயே டம்மியாக்கப்பட்டு உள்ளார். வனிதாவை பார்த்து கேள்வி கேட்க பயமா என பாலாஜி முருகதாஸ் சரியான நேரத்தில் கொளுத்திப் போட்டதும் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் வனிதாவுக்கு எதிராக திரும்பி உள்ளனர்.

சுரேஷ் தாத்தாவுடன் மோதல்
அபிராமி உடன் அமர்ந்திருக்கும் சுரேஷ் தாத்தாவிடம் நீங்க இங்கே என்ன பண்றீங்க என கேள்வி கேட்டு ஏழரையை ஆரம்பித்து வைத்துள்ளார் வனிதா விஜயகுமார். மேடமோட டச்சப் ஆக இருக்கிறேன் என சுரேஷ் தாத்தா சொல்ல பிரஸ்மீட்டில் உங்களுக்கு என்ன வேலை என கேட்டதும் கொதித்தெழும் சுரேஷ் தாத்தா வனிதாவை வெளுத்து வாங்கி உள்ளார்.

அடக்கம் வேணும்
ஒரு ஸ்டாரை பார்த்து இப்படியொரு கேள்வி கேட்கலாமா? என சுரேஷ் தாத்தா கிளம்ப நீங்க ஸ்டாரே இல்லையே அதான் கேட்கிறேன் என வனிதா பதிலடி கொடுத்துள்ளார். நீங்க நேத்துக்கு பேசலையா பிரஸ்ஸை எதிர்த்து என சினேகன், அனிதாவை வாயடைக்க வைத்த வனிதாவின் பேச்சை வைத்தே மடக்கிய சுரேஷ் சக்கரவர்த்தி அடக்கம் வேணும் என அதிரடியாக பொளந்து கட்டி உள்ளார்.

அருகதை கிடையாது
எடுத்த உடனே மத்தவங்க பேசக் கூடாதுன்னு சொல்ல உனக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது என ஒவ்வொரு பந்திலும் சிக்சர் அடித்து வருகிறார் சுரேஷ் தாத்தா. வனிதா விஜயகுமாருக்கு சரியான போட்டி இந்த சீசனில் தான் இருக்கு. இந்த சீசனை விஜய் டிவியிலேயே போட்டிருந்தால் வேற லெவல் வரவேற்பு கிடைத்திருக்கும் பாவம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் என்பதால் ஓட்டுப் போட கூட தனியாக ட்வீட் போட்டு கெஞ்ச வேண்டிய நிலைமை வந்து விட்டதே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

இந்த வாரம் நோ எலிமினேஷன்
வனிதா விஜயகுமார் கடைசி இடத்தில் உள்ள நிலையில், முதல் வாரமே அவரை அனுப்ப மாட்டார்கள் என்றும் இந்த வாரம் நோ எலிமினேஷன் என்றும் ரசிகர்கள் கணித்து வருகின்றனர். ஆனால், அதே சமயம் வெறும் 70 நாட்களே உள்ள நிலையில், முதல் வாரத்தில் இருந்தே எலிமினேஷன் செய்தால் தான் நல்லா இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











