twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடாமல் அசையாமல் இருக்கும் ரியோ.. முத்தம் கொடுக்க கிட்ட போன ஜித்தன் ரமேஷ்.. எல்லை மீறிய சுரேஷ்!

    |

    சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் 16ம் நாள் எபிசோடின் 3வது புரமோ வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    Recommended Video

    Rio விடம் மல்லுக்கட்டிய Anitha | எனக்கு மரியாதையே இல்ல Day 15

    பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் ரியோ ராஜ், இம்சை அரசன் கெட்டப்பில் இருப்பதை பார்த்தாலே சிரிப்புத் தானாக வருகிறது.

    ஆனால், அவரை, விஜிபியில் இருக்கும் சிரிக்காத மனிதரை போல மாற்றி விட்டு ஆட்டம் காட்டி உள்ளனர்.

    கையெடுங்க.. சுரேஷை மிரட்டிய பாலாஜி.. சொர்க்கபுரி vs மாயபுரி ஜெயிக்கப் போவது யாரு? செம புரமோ!கையெடுங்க.. சுரேஷை மிரட்டிய பாலாஜி.. சொர்க்கபுரி vs மாயபுரி ஜெயிக்கப் போவது யாரு? செம புரமோ!

    எல்லா புரமோவிலும்

    எல்லா புரமோவிலும்

    இன்று போடப்பட்ட எல்லா புரமோவிலும் விஜய் டிவியின் செல்லப் பிள்ளையைத்தான் ஹைலைட் பண்ணி காட்றாங்க, சொல்லப் போனா டைட்டில் வின்னராக கூட அந்த சவாலான போட்டியாளரை அறிவித்தாலும் அறிவிப்பாங்கன்னு தெரியுது. ஆனால், மக்கள் மத்தியில் ரியோ நாளுக்கு நாள் வில்லனாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

    இரிடேட்டிங்கா இருக்கு

    இரிடேட்டிங்கா இருக்கு

    ரியோ ராஜ் செய்கை எல்லாம் ரொம்ப இரிடேட்டிங்கா இருக்கு என்றும், அவருக்கு அத்தனை பேரும் மாஸ்க் கொடுத்தது சரியான ஒன்று தான் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் ரியோவுக்கு எதிரான கமெண்ட்டுகளாகவே அள்ளி வீசி வருகின்றனர். மேலும், அவரது ஆட்டிட்யூட் கொஞ்சம் கூட சரியில்லை என்றும் கூறுகின்றனர்.

    தலைவர் பதவி வந்துட்டாலே

    தலைவர் பதவி வந்துட்டாலே

    மேலும், சில ரசிகர்கள், தலைவர் பதவி வந்துட்டாலே பிக் பாஸ் வீட்டில் அந்த போட்டியாளர்களுக்கு ரெண்டு கொம்பு முளைப்பது சகஜமான ஒன்று தான். சர்வாதிகாரி டாஸ்க்கில் நடிகை ஐஸ்வர்யா தத்தா ஆடாத ஆட்டமா என்றும் போன வாரம் சுரேஷ் கூட அப்படித் தான் இருந்தார். இந்த வாரம் ரியோ ஆடுறார் என விளாசி வருகின்றனர்.

    இன்னைக்கு ரியோ தான் பலியாடு

    இன்னைக்கு ரியோ தான் பலியாடு

    இப்போது வெளியாகி உள்ள 3வது புரமோவை பார்த்த ரசிகர்கள், இன்னைக்கு ரியோ தான் பலியாடு போல தெரிகிறதே என கலாய்த்து வருகின்றனர். இம்சை அரசன் கெட்டப்பில் செம காமெடியாக இருக்கும் ரியோ ராஜை, மொட்டை சுரேஷ் தனது அரக்கர்கள் கூட்டத்துடன் சேர்ந்து கலாய்ப்பது வேற லெவல் என்டர்டெயின்மெண்ட்.

    முத்தம் கொடுக்க வந்த ரமேஷ்

    முத்தம் கொடுக்க வந்த ரமேஷ்

    இந்த மூன்றாவது புரமோவில் ஆடாமல் அசையாமல் இருக்கும் ரியோ ராஜை, எப்படியாவது அவுட்டாக்கி விட வேண்டும் என்பதற்காக, முத்தம் கொடுப்பது போல கிட்ட போய் நல்லாவே வெறுப்பேற்றுகிறார் ஜித்தன் ரமேஷ். இதுக்கு மேலும் அவர் கேம் விளையாடலன்னு யாருமே சொல்ல மாட்டாங்க..

    நல்லா வெறுப்பேத்துறாரு

    நல்லா வெறுப்பேத்துறாரு

    வாயிலேயே மியூசிக்.. கையில சொடக்கு என ரியோவின் மூஞ்சிக்கு நேராகவே அவரை வெறுப்பேற்றும் வாய்ப்பு கிடைத்தால் கரும்புத் தின்ன கூலிக் கணக்காக ஆகிவிட்டது நம்ம மொட்டை தாத்தாவுக்கு, ரியோவை நல்லா வச்சி செஞ்சி வெறுப்பேத்துற புரமோவை பார்த்த உடனே நிச்சயம் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி சும்மா எகிறும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    அவன் புர்ரு

    அவன் புர்ரு

    நான் சும்மா போய் நின்னாலே ரியோவுக்கு கோபம் வரும் என படுத்துக் கொண்டே பாலாஜியிடம் பேசும் சுரேஷ், ரியோவை வச்சு செய்ற கண் கொள்ளா காட்சியை ரசிகர்கள் கண்டு ஆனந்த கூத்தாடி வருகின்றனர். அவ்ளோ தானா டர்ரா சொல்லு என அனிதா கலாய்க்க, அவன் புர்ரு என சுரேஷ் எல்லை மீறி கடுப்பேற்றுகிறார்.

    யார் ஜெயிப்பா

    யார் ஜெயிப்பா

    சொர்க்கபுரி அரச குடும்பத்துக்கும், மாயபுரி அரக்க குடும்பத்துக்கும் இடையே நடக்கும் இன்றைய போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை காண ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சொதப்பி விட்டதால், ஆட்டோமேடிக்காக இனி நைட் எல்லா டிவிகளும் பிக் பாஸ் பக்கம் திரும்பிவிடும்.

    பத்த வச்சிட்டீயே பிக் பாஸ்

    பத்த வச்சிட்டீயே பிக் பாஸ்

    சும்மாவே பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை வெடிக்கும், இப்படி சிலையாக ஒரு டீமை இருக்கச் சொல்லிவிட்டு இன்னொரு டீமை வைத்து வெறுப்பேற்றும் விளையாட்டால், என்ன என்ன விபரீதங்கள் வெடிக்கப் போகிறதோ, யார் யாருக்கு சண்டை முட்டிக்கப் போகுதோ என்ற எதிர்பார்ப்புகளை இன்றைய புரமோ வீடியோக்கள் நல்லாவே எகிற வைத்து இருக்கிறது. இதே மாதிரி பண்ணுங்க பிக் பாஸ் என்றும், நல்லா பத்த வச்சிட்டீயே பிக் பாஸ் என்றும் ரசிகர்கள் சுரேஷை போலவே பிக் பாஸை ஓட்டி வருகின்றனர்.

    English summary
    Suresh Chakaravarthy teases Rio Raj directly for using today drama task in Bigg Boss Tamil 4 house. Many of the fans commented against Suresh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X