பொங்கல் சாம்பாரை சாப்பிட்டுட்டு.. வெண்ணிலவேன்னு ஆடுன மாதிரி இருந்தது.. மொட்டைக்கு குசும்புதான்!
சென்னை: சாம் சோம் என ஜோடி போட்டு சுற்றும் இருவரையுமே ஜோடியாக மாற்றி "வெண்ணிலவே வெண்ணிலவே" பாட்டுக்கு ஆட வைத்தார் பிக் பாஸ்.
பாக்ஸிங் பண்ணுவதென்றால் பக்காவாக பண்ணி அசத்தும் சோமசேகரை போய் பிரபுதேவா பாட்டுக்கு ஆட சொன்னால், பாவம் அவர் என்ன பண்ணுவாரு..
குட்டிக் கவுனை அணிந்து கொண்டு தொடை தெரிய கவர்ச்சி தரிசனம் தந்த சம்யுக்தா பக்கம் தான் பார்வையாளர்கள் ஃபுல் போக்கஸும்.

அ முதல் ஃ தானடா
ஜித்தன் ரமேஷுக்கு வேற எந்த பாட்டை போட்டாலும், ஆடமாட்டார் என தெரிந்து கொண்டு, அவருடைய பாட்டான அ முதல் ஃ தானாட பாட்டையே போட்டு ஆட வைத்தார் பிக் பாஸ். ஆனால், அவருக்கு ஜோடி தான் அந்த பாட்டில் வந்த கவர்ச்சி கன்னியாக இல்லாமல், வயசான ரேகாவை போட்டு சொதப்பி விட்டனர்.

வெண்ணிலவே வெண்ணிலவே
அடுத்ததாக வெண்ணிலவே வெண்ணிலவே பாட்டுக்கு, சம்யுக்தா மற்றும் சோமசேகர் இணைந்து ஆடினார்கள். இருவரும் அந்த பாட்டுக்கு ஆடியதை விட கீழே கேப்ரியல்லா செமையா பாட்டு பாடி ஆடியதை தான் ரசிகர்கள் பலரும் ரசித்து பார்த்தனர். சோமசேகர் நெய் விளம்பரத்துக்கு ஆடுன அளவுக்கு கூட இங்கே ஆடவில்லை.

குட்டி கவுன்
கஜோல் போட்டிருந்த குட்டி கவுன் போல முன்னாள் மாடல் சம்யுக்தாவுக்கும் ஒரு குட்டி கவுனை பிக் பாஸ் பார்சல் பண்ணி இருந்தார். அதை கச்சிதமாக அணிந்து கொண்டு, தன்னால் முடிந்த வரை ஸ்டெப் போட்டு சம்யுக்தா ஆடினார். பிக் பாஸ் ரசிகர்களுக்கு தொடை தெரிய ஆடிய சம்யுக்தாவின் ஆட்டம் ரொம்பவே பிடித்து இருந்தது.

பொங்கலையும் சாம்பாரையும் சாப்பிட்டுட்டு
சம்யுக்தா, சோமசேகர் வெண்ணிலவே வெண்ணிலவே பாட்டுக்கு ஆடிய நடனத்தை மொட்டை தல சுரேஷ் செம கலாய் கலாய்த்து இருந்தார். அது எப்படின்னா, பொங்கலையும் சாம்பாரையும் சாப்பிட்டுட்டு சட்டையில தேய்ச்சிக்கிற மாதிரி இப்படி இப்படி ஆடுறாங்க என மரண ட்ரோல் செய்தார்.

வேல் முருகன் ஆட்டத்தையும்
முன்னதாக பிக் பாஸ் வீட்டின் 10ம் நாள் எபிசோடில் வேல்முருகன், சனம் ஷெட்டி வச்சிக்கவா பாட்டுக்கு ஆடிய போதும், மொட்டை தாத்தா சும்மா இல்லை. வேல்முருகனின் ஆட்டத்தை சனம் ஷெட்டியிடமே கிண்டல் பண்ணி மிரட்டல் பர்ஃபார்மான்ஸ் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப ஓவர்
அனிதா சம்பத்துடன் இவர் குலுங்க குலுங்க ஆடிவிட்டு, மற்ற போட்டியாளர்களின் ஆட்டத்தை எல்லாம் கிழவன் ட்ரோல் பண்ணுறானே என ஏற்கனவே பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளித்து மீம்களாக போட்டுத் தள்ளினர். இந்நிலையில், இப்போ பொங்கல் சாம்பார் மேட்டரும் செம வைரலாகும் என்பது கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











