சோமசேகர் எலிமினேஷன்.. சுரேஷ் தாத்தா சொன்ன ஜோசியத்துலேயும் இருக்குதே எப்படி பிக் பாஸ்?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது நிச்சயம் அழகிய தமிழ் மகன் சோமசேகர் தான் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தும் வகையில் இன்றைய ஷோ இருந்ததை கவனித்தீர்களா?

சுரேஷ் தாத்தா, தான் ஒரு பகுத்தறிவாளர் என்றும் ஜோசியத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றாலும், நடிப்புக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன் என பிக் பாஸ் வீட்டில் குறி சொல்ல ஆரம்பித்தார்.

சோமசேகருக்கு அவர் குறி சொல்லும் போது, குறிப்பா ஒரு விஷயத்தையும் சொன்னதை கேட்ட உடனே, அப்போ கன்ஃபார்மே பண்ணிட்டீங்களா என்றே தோன்றுகிறது.

பிக் பாஸ் வீட்டில் ஜோசியம்

பிக் பாஸ் வீட்டில் ஜோசியம்

என்னங்கடா இந்த சீசனில் ஏகப்பட்ட போட்டியாளர்களை ஜோசியக்காரர்களாக பார்ட் டைம் ஜாப்க்கு டிரைனிங் கொடுக்கிறீங்களோ என்கிற அளவுக்கு, ஆஜீத், வேல்முருகனை தொடர்ந்து இன்று பகுத்தறிவாளர் சுரேஷ் தாத்தாவையும் டாஸ்க்குக்காக ஜோசியம் சொல்ல வச்சிட்டீங்க.. இன்னும் யாரை எல்லாம் ஜோசியக்காரர்கள் ஆக்கப் போறீங்களோ?

மொட்டையிலே குத்து

மொட்டையிலே குத்து

முதல் நபராக அறந்தாங்கி நிஷாவுக்கு ஜோசியம் பார்த்த சுரேஷ் சக்கரவர்த்தி, தனது அத்தனை குறும்புத்தனங்களையும் மிக்ஸ் பண்ணி ‘நி' 'ஷா' என வார்த்தை ஜாலத்தை எல்லாம் பயன்படுத்தி ஜோசியம் என்கிற பேரில் நல்லாவே காமெடி செய்தார். அதனை ரசித்து சிரித்த நிஷா உடனே சுரேஷ் தாத்தாவின் மொட்டையிலேயே குத்து விட்டு சென்றார்.

ஊசல் ஆடுது

ஊசல் ஆடுது

பிக் பாஸ் வீட்டில் சோமசேகரின் நிலை ஊசல் ஆடிக் கொண்டு இருக்கிறது என சோமசேகருக்கு தாத்தா குறி சொன்னார். அதற்காக மாஞ்சா போட்டு வலுப்படுத்து சோமசேகர் என்றும், அந்த மாஞ்சா ஸ்ட்ராங்குக்காக இருக்க வேண்டுமே தவிர யாருடைய கழுத்தையும் அறுக்க இருக்கக் கூடாது என்றார்.

மொட்டை தலைக்கு முத்தம்

மொட்டை தலைக்கு முத்தம்

சோமசேகருக்கு குறி சொன்ன உடனே சுரேஷ் சக்கரவர்த்தியின் மொட்டை தலையில் சோம்ஸ் முத்தம் கொடுத்து விட்டு எப்போதும் போலவே ரொம்பவே கூலாகவே இருந்தார். ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தி சொன்ன ஆருடத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சூட்சமும் இருப்பதாக ரசிகர்கள் சந்தேகிக்கத் தொடங்கி விட்டனர்.

சோமசேகர் தான் வெளியேறுகிறார்

சோமசேகர் தான் வெளியேறுகிறார்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு அழகிய தமிழ் மகன் போட்டியாளர் சோமசேகர் தான் வெளியேறப் போகிறார் என்பது தாத்தாவின் ‘ஊசல் ஆடுகிறது' என்ற வார்த்தையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது என பிக் பாஸ் ரசிகர்கள் பின் பாயின்ட் பண்ணி கமெண்ட்டுகளை கொட்ட ஆரம்பித்து விட்டனர்.

அர்ச்சனா முகத்தை பார்க்கணுமே

அர்ச்சனா முகத்தை பார்க்கணுமே

கடைசியாக அனிதாவுக்கு மொட்டை பாஸ் சுரேஷ் ஜோசியம் பார்த்து, இந்த வீட்டிலேயே நீ தான் மா மகராசி என சுமங்கலி மேட்டருக்கு முட்டுக் கொடுக்கும் விதமாக பேசும் போது அர்ச்சனாவின் முகம் போன ரியாக்‌ஷன் வேற லெவல். பிக் பாஸ் வீட்டின் எவிக்‌ஷன் குறியீடுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்கவே இந்த ஜோசியக்காரர் டாஸ்க் என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X