'க்ளோஸ் எனஃப்' பப்பரப்பா என படுத்திருக்கும் அர்ச்சனா.. ஒத்த மீமை போட்டு மொத்தமாய் பழிதீர்த்த சுரேஷ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மீம் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி.
பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே வயது மூத்தவர் என்றாலும் நேர்மையாக விளையாடி இளம் போட்டியாளர்கள் பலருக்கு டஃப் கொடுத்து வந்தார்.

குறைந்த சுவாரசியம்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாவது போட்டியாளராக வெளியேறினார். சுரேஷ் சக்கரவர்த்தி சென்ற பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியம் குறைந்துவிட்டது.

விரைவில் வரலாம்
இதனால் சுரேஷ் சக்கரவர்த்தியை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்ட் என்ட்ரியாக கொண்டு வருமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி விரைவில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அர்ச்சனா குறித்து மீம்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சுரேஷ் சக்கரவர்த்தி அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் அர்ச்சனா குறித்து ஒரு மீம்மை வெளியிட்டுள்ளார்.

க்ளோஸ் எனஃப்
அதில் பிக்பாஸ் வீட்டுக்குள் சோஃபாவில் சுரேஷ் சக்கரவர்த்தி காலை விரித்து படுத்திருந்த படமும், மற்றொரு படத்தில் அதே ஸ்டைலில் அர்ச்சனா படுத்திருந்த போட்டோவையும் ஒப்பிட்டு க்ளோஸ் எனஃப் என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

கேலி செய்து கிண்டல்
இந்த மீம்மைதான் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. அர்ச்சனா வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது, சுரேஷ் சக்கரவர்த்தி சோஃபாவில் படுத்திருந்ததை படு மோசமாக கேலி செய்து கிண்டலடித்தார்.

நெட்டிசன்ஸ் மீம்
மேலும் கமலின் முன்பு சக ஹவுஸ்மேட்ஸை போன்று நடித்துக் காட்ட வேண்டும் என்று கூறிய எபிசோடிலும், சுரேஷ் சக்கரவர்த்தியை போல் பப்பரப்பா என படுத்து எல்லை மீறினார். மற்றவரை கிண்டலடித்ததை மறந்து அர்ச்சனாவும் அதே போன்று படுத்திருந்ததை பார்த்த நெட்டிசன்கள் மீம் போட்டு விட்டனர்.
Recommended Video

சீக்கிரம் வீட்டுக்கு போங்க
அந்த மீமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து பங்கம் செய்துள்ளார் சுரேஷ் சக்கவர்த்தி. அதனை பார்த்த நெட்டிசன்கள், தாத்தா செம என தம்ப்ஸ் அப் செய்து வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் தாத்தா திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்கு போங்க என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











