இன்னும் இருக்கு.. அமைதியா இருக்கே ஒன்னு.. அதுதான் விஷமே.. அனிதாவை அசிங்கப்படுத்திய சுரேஷ்!
சென்னை: நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்தை விஷம் என்று கூறி மொத்தத்துக்கும் டேமேஜ் செய்து விட்டார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் மிக விரைவாகவே சூடுபிடித்துள்ளது.
அதற்கு காரணம் இளம் போட்டியாளர்கள் சிலர் கடந்த சீசன்களை பார்த்து, புரமோவில் இடம் பிடிக்க வேண்டும் என ஒன்றுமில்லாத பிரச்சனைகளையெல்லாம் ஊதி பெரிதாக்கி வருவதுதான்.

அனிதா சம்பத்
இந்நிலையில் நேற்றைய எபிசோடிலும் வாக்குவாதமும் சண்டைகளும் களைக்கட்டியது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டின் குக்கிங் டீமில்தான் பிரச்சனைக்குரிய ஆட்கள் உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அனிதா சம்பத், மூத்த நடிகரான சுரேஷ் சக்கரவர்த்தியை வெட்டியாக வம்பிழுத்து மரியாதைக்குறைவாக பேசினார்.

உப்பு போட்டு சாப்பிடுறவன்
இதனால் கடுப்பான சுரேஷ் சக்கரவர்த்தி, எனக்கு தன்மானம் தான் முக்கியம். இனிமேல் தன்னால் குக்கிங் டீமில் இருக்க முடியாது. உப்பு போட்டு சாப்பிடுறவன் எவனும் அந்த டீமில் இருக்க மாட்டான் என பெரிய பெரிய வார்த்தைகளை பேசினார்.

குக்கிங் டீம்
மேலும் தன்னை டாய்லெட் க்ளீனிங் டீமுக்கு மாற்ற சொன்ன அவர், அனிதா சம்பத்தால்தான் தனக்கு பிரச்சனை என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி இல்லாத நேற்றைய குக்கிங் டீமில், அனிதாவின் வேலையை சனம் பார்த்தார்.

ரேகாவிடம் மல்லுக்கட்டிய சனம்
அதாவது இதுவரை அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தியை நோண்டிக் கொண்டிருந்தார். ஆனால் நேற்று சனம் ஷெட்டி அதேபோல் ரேகாவை நோண்ட ஆரம்பித்து விட்டார். பைசாவுக்கு புரயோஜனமில்லாத விஷயத்துக்கு ரேகாவிடம் மல்லுக்கட்டினார்.

விடாத சனம்
ரேகா சண்டை சச்சரவுகள் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்க முயன்றபோதும் சனம் ஷெட்டி அவரை விடுவதாயில்லை. கன்னாபின்னாவென பேசி வம்பை வளர்த்துக்கொண்டே இருந்தார். அதனை பார்த்த சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றவர்களிடம், நான் சொன்னேன் இல்லையா அவர்களுக்குள்ளேயே முட்டிக் கொள்வார்கள் என்று கூறினார்.

அதுதான் விஷம்
அதோடு இன்னும் இருக்கு.. ஒன்னு அமைதியா இருக்கு.. அதுதான் விஷமே.. என்றார். மேலும் மற்றொரு இடத்தில் இதெல்லாம் பெருசு இல்லை. மெயின் சுவிட்ச் அமைதியா இருக்கு.., அப்புறம் பாருங்க என அனிதா சம்பத்தை கிடைத்த கேப்பில் எல்லாம் அசிங்கப்படுத்தினார். இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு நீங்க வொர்த்துதான் என்று கூறினர்.


Click it and Unblock the Notifications











