உப்பு போட்டு தின்றவன் எவனும் அந்த டீமில் இருக்க மாட்டான்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!
சென்னை: குக்கிங் டீமில் உள்ள சுரேஷ் சக்கரவர்த்தி உப்பு போட்டு சாப்பிடுவன் எவனும் அந்த டீமில் இருக்க மாட்டான் என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டின் குக்கிங் டீமில் சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா, சனம் ஷெட்டி மற்றும் அனிதா ஆகியோர் உள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே அனிதாவுக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது.

அடிக்கடி வாக்குவாதம்
அனிதா, மரியாதை குறைவாகவும் வீணாக சீண்டும் வகையிலும் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் பேசி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்வாதம் ஏற்பட்டு வருகிறது.

கெடுத்து விடுவார்கள்
சுரேஷ் சக்கரவர்த்தி வேண்டாம் என்றாலும் அனிதா சம்பத் விடுவதாய் இல்லை. வாண்ட்டடாக போய் பேசி வம்பிழுத்து வருகிறார். எல்லாத்தையும் செய்துவிட்டு தன்னுடைய பெயரை கெடுத்து விடுவார்கள் என புலம்பி வருகிறார்.

டாய்லெட் க்ளீன்
இதனால் விரக்தியடைந்த சுரேஷ் சக்கரவர்த்தி, என்னால் இனி குக்கிங் டீமில் இருக்க முடியாது. என்னை டாய்ரெட் கிளீனிங் டீமுக்கு மாற்றி விடுங்கள் நான் நன்றாகவே டாய்லெட் க்ளீன் பண்ணுவேன் என்கிறார்.

உப்பு தின்றவன்..
அதனை சக டீம் மெட்ஸ்கள் ஒப்புக்கொள்ளவில்லை, நீங்கள் குக்கிங் டீமில்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு உப்பு போட்டு தின்றவன் எவனும் அந்த டீமில் இருக்க மாட்டான் என பெரிய வார்த்தையை பயன்படுத்தி மொத்த பிக்பாஸ் வீட்டையும் அதிர்ச்சியடைய செய்கிறார்.

இந்த மேடத்துடன்
இதைத்தொடர்ந்து சனம் ஷெட்டி சுரேஷை கட்டிப்பிடித்து நீங்கள் போனால் நானும் போவேன் என்கிறார். ஆனால் உங்களுடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை இந்த மேடத்துடன்தான் பிரச்சனை என அனிதாவை காட்டுகிறார்.

எனக்குதான் பிரச்சனை
அதற்கு அனிதா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூற உங்களுக்கு பிரச்சனை இல்லை எனக்குதான் பிரச்சனை என்கிறார் சுரேஷ். நான் என்ன செய்தேன் என அனிதா கேட்க உங்களுக்கு சொன்னா புரியாது, குறும்படம்தான் போடவேண்டும் என்று நறுக்கென சொல்லிவிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.


Click it and Unblock the Notifications











