பிக்பாஸ் ரீஎன்ட்ரியில் ஓரங்கட்டப்பட்ட சுரேஷ் தாத்தா..பகிர்ந்த அதிர்ச்சி தகவல்.. கவலையில் ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் பழைய போட்டியாளர்கள் ரீஎன்ட்ரி ஆகியுள்ள நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி அழைக்கப்படாததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஃபினாலே வாரமான இந்த வாரத்தில் ஆரி, பாலாஜி, ரியோ, கேபி, சோம், ரம்யா என 6 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட்டுகளாக உள்ளனர்.

நேற்று நான்கு பேர்
இந்நிலையில் இந்த வாரம் ஃபினாலே வாரம் என்பதால் ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். அந்த வகையில் நேற்று அர்ச்சனா, நிஷா, ரேகா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

விளாசும் நெட்டிசன்ஸ்
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அர்ச்சனா இன்னும் ஆரியிடம் அதே கோபத்துடன் நடந்து கொள்வதால் அவரை ஏன் மீண்டும் உள்ளே அனுப்பினீர்கள் என விஜய் டிவியை விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

சில நாட்களுக்கு முன்புதான்
இந்நிலையில் இன்று சம்யுக்தா மற்றும் சுச்சி ஆகியோர் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். பிக்பாஸின் மற்றொரு போட்டியாளரான அனிதா சம்பத்தின் அப்பா கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மரணமடைந்தார்.

சுரேஷ் அழைக்கப்படவில்லை
இதனால் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ரீஎன்ட்ரி ஆவாரா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. இந்நிலையில் சக போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி இதுவரை அழைக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ்ச்சிப் படுத்துவேன்
இதுதொடர்பாக சுரேஷ் சக்கரவர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஃபைனலிஸ்ட் மற்றும் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் மற்ற எவிக்ட்டட் போட்டியாளர்களுக்கு ஆல் த பெஸ்ட். டிவியின் முன்பு அமர்ந்து உங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவேன் என்று பதிவிட்டுள்ளார்.

ப்ளீஸ் நீங்க போங்க..
இதனை பார்த்த ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குள் போகவில்லை, ப்ளீஸ் நீங்க போங்க.. உங்களை மீண்டும் பார்க்க விரும்புகிறோம் என பதிவிட்டார்.

ரசிகர்கள் கவலை..
அதற்கு பதில் கூறிய சுரேஷ் சக்கரவர்த்தி இதுவரை அழைக்கப்படாத ஒரே போட்டியாளர் நான் மட்டும்தான் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பெரும் கவலை அடைந்துள்ளனர்.

ஆரிக்கு ஆகாதவர்கள்
நீங்கள் சென்றிருந்தால் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் ரியோ போன்ற சில போட்டியாளர்களின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வந்திருப்பீர்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆரிக்கு ஆகாதவர்களைதான் உள்ளே அனுப்புகிறார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











