அங்கங்க ஆனந்தம் இருக்கு.. ஆனா முழுசா ஆனந்தம் இல்ல.. மொத்தத்தையும் கொட்டி தீர்த்த தாத்தா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் அங்கங்க ஆனந்தம் இருக்கே தவிர முழுவதுமாய் இல்லை என குரூப்பிஸம் இருக்கு என்பதை மீண்டும் ஒரு முறை பட்டி மன்றத்தின் மூலம் கூறினார் சுரேஷ் சக்கரவர்த்தி.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பட்டிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் என்ற தலைப்பிலும் பிக்பாஸ் ஒரு போட்டிக்களம் என்ற தலைப்பிலும் இரு அணிகளாக ஹவுஸ்மேட்ஸ் பிரிந்து பேசினர்.

அவரை தூக்கு
இதில் பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம் என்ற தலைப்பில் பேசிய சுரேஷ் சக்கரவர்த்தி, வாழ்க்கைன்னா போட்டி இருக்கும். போட்டி இருந்தால் கட்டாயம் பொறாமை இருக்கும். அவரு சரியில்லை, அவரை தூக்கு நாமினேட் பண்ணு என்பது போட்டி.

முழுக்க ஆனந்தம் இல்லை
இங்கு அங்கங்கு ஆனந்தம் இருக்கு ஆனால் முழுக்க ஆனந்தம் இல்லை. வாழ்க்கையே போட்டி, பிக்பாஸே போட்டி, பட்டி மன்றமும் போட்டி. ஆக இது போட்டிக்களம்தான் என்று கூறி முடித்தார்.

மீண்டும் அழுத்தம் திருத்தமாக
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாக கூறினார் சுரேஷ் சக்கவர்த்தி. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருக்கு என்பதை பட்டி மன்றத்தின் மூலம் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறினார் சுரேஷ்.

குடும்பம் குடும்பமாக உள்ளது..
சுரேஷ் பேசியதாக புரமோவில் காட்டப்பட்ட சில விஷயங்கள் நிகிழ்ச்சியில் காட்டப்படவில்லை. குறிப்பாக குடும்பம் குடும்பமாக உள்ளது ஒரே குடும்பமாக இல்லை என்று கூறிய போர்ஷன் இல்லை.


Click it and Unblock the Notifications











