தேம்பித் தேம்பி அழுது.. மன்னிப்பு கேட்ட சுரேஷ்..தொடர்ந்து வசைப்பாடும் ஹவுஸ் மேட்ஸ் !
சென்னை: பிக் பாஸில் நேற்று ஒளிபரப்பப்பட்ட அரச குடும்பமாக அரக்கக் குடும்பமாக என்ற டாஸ்கில் இதற்கு முன் அரக்கக் குடும்பமாக இருந்த சுரேஷ், ஆரி, கேப்ரில்லா, ஷிவானி, ஆஜித் உள்ளிட்டோர் அரச குடும்பமாக பதவியேற்றனர்.
அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நபர்களையும் தந்திரத்தின் மூலம் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு அரக்கக் குடும்பம் தூக்கியது.
இந்நிலையில் அரக்கக் குடும்பத்தை சேர்ந்தவர்களை அரச குடும்பத்திலிருந்த சுரேஷ் துடைப்பத்தை கொண்டு தலையில் அடித்தது இப்பொழுது சர்ச்சைக்குள்ளாகி சுரேஷை பலரது முன்னிலையிலும் மன்னிப்பு கேட்க வைத்துள்ளது.

அடிமையாக்கி விட்டனர்
அரச குடும்பத்திலிருந்து அரக்கக் குடும்பமாக புரமோட் செய்யப்பட்டவர்கள் தந்திர வேலைகளால் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆரி மற்றும் ஆஜித்தை அடிமையாக்கி விட்டனர்.

ஸ்டாடர்ஜிகளை செய்து
இதனால் நொடிக்கு நொடி ஜாக்கிரதையான அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரக்கக் குடும்பத்தை நோக்கி பல்வேறு ஸ்டாடர்ஜிகளை செய்து விரட்டி வந்தனர்.

மிளகாய் பொடி
எனினும் அரக்கக் குடும்பம் ஸ்பிரே அடிப்பது, காதின் அருகில் சத்தமான ஒலி எழுப்புவது, கத்துவது, மிளகாய் பொடியை தூவ பிளான் செய்வது என பல்வேறு தந்திரமான வேலைகளில் ஈடுபட்டது.

ஒழிய வைத்தனர்
இதையறிந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் உஷாரான நிலையில் அரக்கக் குடும்பத்தை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என அவர்கள் வைத்திருந்த சில பொருட்களையும் கைப்பற்றி ஒழிய வைத்தனர்.

ரசிக்க வைக்கும் பாடல்கள்
இந்நிலையில் அரச குடும்பத்தின் நிலைமையைப் பற்றி ரசிக்க வைக்கும் பாடல்களால் பிக்பாஸ் இடம் பேசி வந்த சுரேஷ் சக்ரவர்த்தி விளையாட்டாக துடைப்பத்தைக் கொண்டு அரக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களான அறந்தாங்கி நிஷா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரை தலையில் தாக்க அந்த பிரச்சனை இப்பொழுது பூகம்பமாக வெடித்துள்ளது.

எப்படியாவது பெரிதாக்க வேண்டும்
சுரேஷ் தன்னை தலையில் துடைப்பத்தால் தாக்கியதை விளையாட்டாக அறந்தாங்கி நிஷா ரம்யா பாண்டியன் எடுத்துக்கொண்ட நிலையில், சனம் ஷெட்டி இதை எப்படியாவது பெரிதாக்க வேண்டும் என்ற நோக்கில் தாம் தூம் என கத்திக் கூப்பாடு போட்டார்.

வாடா போடா
அது மட்டுமல்லாமல் சுரேஷ் சக்கரவர்த்தியை வயதில் மூத்தவர் என்று கூட பார்க்காமல் வாடா போடா அந்த ஆளு இந்த ஆளு என கண்டபடி சனம் ஷெட்டி பேசியது பிக்பாஸ் ரசிகர்களிடம் பெரும் கோபத்தை உண்டாக்கியது.

தேம்பித் தேம்பி அழுதது
மேலும் சிறு பிள்ளைத்தனமாக தான் செய்த தவறை நினைத்து வருந்திய சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸிடம் பச்சைக் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதது பார்க்கும் அனைவரையும் உச்சு கொட்ட வைத்தது.

மன்னிப்பு கேட்ட பிறகும்
தான் விளையாட்டாக செய்த தவறை நினைத்து வருந்தி அனைவரது முன்னிலையில் மன்னிப்பு கேட்ட பிறகும் சனம் செட்டி மட்டும் ஓவர் ரியாக்ட் செய்தது பார்க்கும் அனைவரையும் கொந்தளித்த செய்துள்ளது.

ஆதரவு கூடி வருகிறது
வயது வித்தியாசம் பார்க்காமல் தான் விளையாட்டாக செய்த தவறை ஒப்புக் கொண்டு அவரது முன்னிலையிலும் மன்னிப்பு கேட்ட சுரேஷ் சக்கரவர்த்திக்கு இப்பொழுது ரசிகர்களிடையே பெரும் ஆதரவு கூடி வருகிறது.


Click it and Unblock the Notifications











