உன்னை காதலிக்கிறேன்.. 30வது திருமண நாளில் மனைவிக்காக உருகும் சுரேஷ் தாத்தா!

சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தி தனது 30வது திருமண நாளை முன்னிட்டு தனது மனைவியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

நடிகர், நடன கலைஞர், சமையல் கலைஞர் என பல முகங்களை கொண்டவர் சுரேஷ் சக்கரவர்த்தி. தமிழில் மம்முட்டி நடிப்பில் வெளியான அழகன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதில் சொக்கு என்ற கேரக்டரில் வீல் சேரில் அமர்ந்தப்படியே படத்தின் பல திருப்புமுனைகளுக்கு காரணமாயிருந்திருப்பார் சுரேஷ் சக்கரவர்த்தி.

பாட்டிகள் ஜாக்கிரதை

பாட்டிகள் ஜாக்கிரதை

தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் சுரேஷ். பாட்டிகள் ஜாக்கிரதை என்ற குறுந்தொடரில் பாட்டியாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். அந்த சீரியல் தான் கமலின் அவ்வை சண்முகி ரோலுக்கு இன்ஸ்பைரேஷன் என்ற பேச்சும் உண்டு.

பெப்சி உங்கள் சாய்ஸ்

பெப்சி உங்கள் சாய்ஸ்

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான பெரும் பிரபலமான பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியையும் சில காலம் தொகுத்து வழங்கினார் சுரேஷ் சக்கரவர்த்தி. சுரேஷ் சக்கரவர்த்தி இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

சக்ஸ் கிட்சன்..

சக்ஸ் கிட்சன்..

ஆஸ்திரேலியாவில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் சுரேஷ் சக்கரவர்த்தி, சக்ஸ் கிட்சன் என்ற யூ டியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

குடும்பம் குறித்து உருக்கம்

குடும்பம் குறித்து உருக்கம்

அப்போது தனது குடும்பம் குறித்து பல உருக்கமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் சுரேஷ். தனது மகன் ரத்த புற்றுநோயுடன் போராடி மறு ஜென்மம் எடுத்தது, தனது மனைவி தன்னை பிரிந்திருப்பது என பர்சனல் விஷயங்களை கூறி கலங்க வைத்தார்.

30 வருடங்களுக்கு முன்பு

30 வருடங்களுக்கு முன்பு

இந்நிலையில் இன்று தனது 30வது திருமண நாளை கொண்டாடி வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. மேலும் 30 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி.

உன்னை காதலிக்கிறேன்

உன்னை காதலிக்கிறேன்

அந்த போட்டோவுக்கு.. 30 ஆண்டுகள் என்னோடு இருப்பது எளிதல்ல, நீங்கள் அதை செய்துள்ளீர்கள். நன்றி சிக்கு. 30 வது திருமண ஆண்டுவிழா வாழ்த்துக்கள். உன்னை காதலிக்கிறேன்.. என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

மேலும் தனது திருமண போட்டோவையும், தற்போது தனது மனைவியுடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X