இப்படி ஆயிப்போச்சே.. பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதத்தை கடந்து விட்டது.
அதற்குள் ஒரு மாதத்தை தாண்டிவிட்டதா என்று கேட்கும் அளவுக்கு சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி.

2 வைல்ட் கார்டு
16 போட்டியாளர்களுடன் கிராண்ட் ஓபனிங்காக தொடங்கியது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி. அதன் பிறகு அடுத்தடுத்த சில வாரங்களில் அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தனர்.

தப்பிய ஆஜித்
முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் நோ எவிக்ஷன் என அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டாவது வாரத்தில் ரேகா வெளியேறினார். மூன்றாவது வாரத்தில் எவிக்ட்டான ஆஜித், தனது எவிக்ஷன் ஃபிரி பாஸை பயன்படுத்தி தப்பித்தார்.

நாமினேஷன்
இந்நிலையில் கடந்த வாரம் வேல் முருகன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெற்றது காட்டப்பட்டது.

திங்கள் கிழமை முதலே பரபரப்பு
இதில் ஆரி, அர்ச்சனா, அனிதா, சனம் ஷெட்டி, பாலாஜி, சோம சேகர், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 7 பேர் இடம் பெற்றனர். முக்கிய தலைகள் நாமினேஷனில் இடம் பெற்றதால், இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற பரபரப்பு கடந்த திங்கள் கிழமையே தொற்றிக் கொண்டது.

கூறப்பட்ட காரணங்கள்
இதனை தொடர்ந்து சோம சேகர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என கணிப்புகள் வெளியாயின. அதனால்தான் அவரை பிக்பாஸ் வீட்டில் தலைவராக்கவில்லை என்றும் காரணங்கள் கூறப்பட்டன.

குறைவான வாக்குகள்
சோம சேகர் இதுவரை எந்த கன்டென்ட்டும் கொடுக்காததால் அவரை வெளியேற்றி விடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாயின. மேலும் சமூக வலைதளங்களிலும் சோம சேகரே குறைவான வாக்குகளை பெற்றிருப்பதாக கூறப்பட்டது.

ஊசல் ஆடும் நூல்
இதனால் அவர்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்றும் கூறப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் ஜோசியம் சொன்ன சுரேஷ் சக்கரவர்த்தியும், சோம சேகரின் நூலே ஊசல் ஆடுவதாக கூறினார். இதனை தொடர்ந்து சோம சேகர்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார் என்ற தகவல் பரவியது.

நேற்று படப்பிடிப்பு
ஆனால் நேற்று சுரேஷ் சக்கரவர்த்திதான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். ஆகையால் அவர் சென்றுவிடுவார் என பேச்ச எழுந்தது,
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான படப்பிடிப்பு நேற்றே முடிந்துவிட்டது.

றெக்கை கட்டி பறக்கிறது
அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதாக ஒரு தகவல் றெக்கை கட்டி பறந்து வருகிறது. இதற்கான எபிசோட் இன்று இரவு ஒளிபரப்ப படவுள்ள நிலையில் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ரசிகர்கள் ஏமாற்றம்
ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்று இரவு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதுதான் தெரிய வரும். இருந்த போதும் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டதாக வெளியாகும் தகவல் ஏமாற்றமளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











