பிக் பாஸ் ஸ்பெஷல் … இருக்குறதுலயே அது தான் விஷம்… யாரை பொடி வைத்துப் பேசுகிறார் சுரேஷ்!
சென்னை : பிக்பாஸ் வீட்டில் பல்வேறு வேலைகளுக்காக போட்டியாளர்களை பல குழுக்களாக அமைக்கப்பட்டு இருந்தாலும் சமையல் குழுவில் இருக்கும் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் எலியும் பூனையுமாக சண்டையிட்டு வருவது பார்க்கும் அனைவரையும் கிளுகிளுக்க வைத்துள்ளது.
பிக்பாஸ் தொடங்கிய நாள் முதலே சுரேஷுக்கும் அனிதாவுக்கும் முட்டிக்கொள்ள, இப்பொழுது அந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து மற்ற போட்டியாளர்களின் மீது சுரேஷின் கவனம் திரும்பியுள்ளது.
இந்நிலையில் 5 ஆம் நாள் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியனிடம் சுரேஷ் பேசும்போது மறைமுகமாக சக போட்டியாளர் ஒருவரை விஷ பாட்டில் என கூறியிருப்பது யாராக இருக்குமென அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

ட்ராக் மாறி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 4 நாட்களாக அனிதா சுரேஷ் சண்டையை மட்டுமே ஜவ்வாக இழுத்து வந்த நிலையில் இப்பொழுது அந்த ட்ராக் மாறி சுரேஷின் கவனம் வேறு சில போட்டியாளர்களின் மீதும் சென்றுள்ளது.

அன்புக்கரம் நீட்டி
போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளுமாறு பிக்பாஸ் கூறியதை அடுத்து 5ம் நாள் பேசிய பாலாஜி முருகதாஸ், சோம் சேகர், ரம்யா பாண்டியன் என அனைவரும் தங்களது சொந்த வாழ்க்கையில் நடந்ததை பற்றி பகிர்ந்து கொள்ள அதில் பாலாஜி முருகதாஸின் கதையைக் கேட்ட ரசிகர்கள் பலரும் அவருக்காக அன்புக்கரம் நீட்டி வருகின்றனர்.

மறைமுகமாக தாக்கி
ஒருபுறம் சென்டிமென்டாக போய்க்கொண்டிருக்க மற்றொருபுறம் சுரேஷ் கடந்த சில நாட்களாக அனிதாவை சீண்டி வந்த நிலையில் இப்பொழுது ரேகா மற்றும் சனம் ஷெட்டியை மறைமுகமாக தாக்கி வருகிறார்.

பல குழுக்களாக
பிக்பாஸில் பல்வேறு வேலைகளுக்காக போட்டியாளர்கள் பல குழுக்களாக அமைக்கப்பட்டிருந்த நிலையில் சமையல் குழுவில் சுரேஷ், ரேகா, சனம் ஷெட்டி, அனிதா சம்பத் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் சுரேஷுக்கு சமையல் குழுவில் இருக்கும் இதர போட்டியாளர்களின் மீது தொடர்ந்து வெறுப்பு உண்டாகி வருகிறது.

அனிதா ஒதுங்கினார்
சுரேஷ் ஒன்று சொல்ல ரேகா ஒன்றை செய்ய சனம் ஷெட்டி அதற்கு வேறொரு காரணம் சொல்ல என மூவரும் மாறி மாறி எலியும் பூனையுமாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் அனிதா சம்பத் ஏற்கனவே நம்ம பட்டது போதும் என ஒதுங்கிவிட்டார்.

அது தான் விஷம் ஜாஸ்தி
இந்நிலையில் ஐந்தாம் நாள் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியனிடம் தனது குழுவைப் பற்றி கடுகடுப்பாக பேசிய சுரேஷ் "இன்னும் ஒன்னு ஓபன் ஆகல.. அது ஓபன் ஆச்சின்னா பத்திக்கும் அந்த இடமே.. ஏன்னா இருக்குறதுலயே அது தான் விஷம் ஜாஸ்தி" என பொடி வைத்தவாறு சுரேஷ் கூறியிருக்க சுரேஷ் கூறிய அந்த விஷபாட்டில் ரேகாவா இல்லை சனம் ஷெட்டியா இல்லை வேற யாராவதா என்பதை அரிய பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











