சனம் ஷெட்டியை நக்கலடித்த சுரேஷ் தாத்தா.. கொதிக்கும் ரசிகர்கள்.. மூளையே இல்லை என சரமாரி விளாசல்!

சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தி சனம் ஷெட்டியை நக்கலடித்து பேசும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி. கொளுத்தி போட்டு சூடு காயப் போகிறேன் என்று ஆட்டத்தை தொடங்கினார்.

ஆனால் அவர் கொளுத்திப் போடாமலே பல பட்டாசுகள் பிக்பாஸ் வீட்டில் வெடித்தன. இதனால் அவர்தான் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் என அவரை வெறுத்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

ஹீரோவான தாத்தா

ஹீரோவான தாத்தா

ஹவுஸ்மேட்ஸ் சுரேஷ் சக்கரவர்த்தியை வெறுத்ததால் ரசிகர்கள் அவரை நேசிக்க தொடங்கினர். அவ்வப்போது சில வார்த்தைகளை விடுகிறார் என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்த போதும், கேப்டன்சி டாஸ்க்கில் கேபியை தூக்கி தோளில் சுமந்ததால் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவானார்.

இருவருக்கும் மோதல்

இருவருக்கும் மோதல்

ஆனாலும் ஆரம்பம் முதலே சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சனம் ஷெட்டிக்கும் ஆகவே இல்லை. தேவையில்லாமல் சுரேஷ் சக்கரவர்த்தி விஷயத்தில் சனம் ஷெட்டி தலையிடுவதும் இதனால் இருவருக்குள்ளும் மோதல் ஏற்படுவதும் தொடர் கதையாய் இருந்தது.

மரியாதை கொடுக்காமல்

மரியாதை கொடுக்காமல்

அவர்களுக்குள் புகைந்துக் கொண்டிருந்த பிரச்சனை நாடா காடா டாஸ்க்கின் போது கொழுந்துவிட்டு எரிந்தது. கையில் வைத்திருந்த ப்ராபர்ட்டி கொம்பால் சனம் ஷெட்டியை தட்டினார். இதனால் கடுப்பான சனம் ஷெட்டி போடா வாடா என வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் சுரேஷ் சக்கரவர்த்தியை விளாசினார்.

வைரலாகும் வீடியோ

இருப்பினும் அந்த பிரச்சனைக்கு பிறகு இருவரும் மன்னிப்பு கேட்டு சகஜமாயினர். இந்நிலையில் சனம் ஷெட்டி பேசியதை கிண்டலடிக்கும் வகையில் அவரைப் போலவே பேசி நக்கலடித்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விளாசும் ரசிகர்கள்

விளாசும் ரசிகர்கள்

பிரபல விஜேவான விக்கியுடன் சேர்ந்து சனமை கிண்டலடித்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. இதனை சனம் ஷெட்டியின் ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தியையும் விக்கியையும் விளாசியுள்ளனர்.

இவர் மட்டும் கேலி செய்யலாம்

சுரேஷ் சக்கரவர்த்தியின் வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன், யாராவது இந்த வயதான மனிதரை கிண்டலடித்தால், கவலைப்படுகிறார். அதனை டிவிட் செய்கிறார். ஆனால் அவர் மட்டும் மற்றவர்களை கேலி செய்யலாம் என கூறியுள்ளார். ரொம்பவே நடிக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

வெட்கக்கேடு தாத்தா..

சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன், வெட்கக்கேடு தாத்தா.. எங்களுக்கு சனம் ஷெட்டியை பிடிக்கும் என பதிவிட்டுள்ளார்.

மரியாதை போய்விட்டது..

சுரேஷ் சக்கரவர்த்தியின் வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன், அவரிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் மீது மரியாதை இருந்தது. ஆனால் இந்த வீடியோவை பார்த்த பிறகு எல்லாம் போய்விட்டது. அவருடைய மறுமுகம் என பதிவிட்டுள்ளார்.

மூளையே இல்லை..

வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆளு மட்டும் இவ்ளோ பெருசா இருக்கார் ஆனால் மூளையே இல்லையே என சுரேஷ் சக்கரவர்த்தியை சாடியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X