ஏன் சனம் கூட போட்டோ எடுக்கல? மாலையுடன் அனிதாவும் சுரேஷும்.. அதகளப்படும் இன்ஸ்டா!
சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தியும் அனிதாவும் மாலையுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே முட்டிக் கொண்ட போட்டியாளர்கள் என்றால் அது அனிதா சம்பத்தும் சுரேஷ் சக்கரவர்த்தியும் தான்.
ஆரம்பத்திலேயே இருவருக்கும் ஏழாம் பொருத்தமாய் ஆனது. அனிதா சம்பத் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் ரொம்பவே ஆட்டியூட் காட்டினார்.

நெட்டிசன்கள் விமர்சனம்
சுரேஷ் சக்கரவர்த்தியின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் அவர் நடந்துகொண்ட விதம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய செய்தது. இதனால் அனிதாவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர் நெட்டிசன்கள்.

சின்ன மச்சான் பாடல்
பல நேரங்களில் அனிதாவுக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் ஏகப்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனிதா பக்கமே தலை காட்டாமல் இருந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் சின்ன மச்சான் பாடலுக்கு சுரேஷ் சக்கரவர்த்தியும் அனிதாவும் போட்ட ஆட்டம் பட்டைய கிளப்பியது.

அப்பா மரணம
பிக்பாஸ் சீசன் 4ல் நடைபெற்ற ஈவன்டுகளிலேயே அதுதான் பெஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது இருவரின் பர்ஃபாமன்ஸும். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனிதா வெளியேறிய பிறகு அவரின் அப்பா மரணமடைந்தார்.

நல்ல பாண்ட்
அவரது இறுதிச்சடங்கில் சுரேஷ் சக்கரவர்த்தி பங்கேற்றார். இதனை தொடர்ந்து இருவருக்குள்ளும் ஒரு நல்ல பாண்ட் உருவானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் டிவியில் பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.

போட்டோக்கள் வைரல்
இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் பங்கேற்றனர். அவர்கள் சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

என்ட்ரி கொடுக்கும் போதே
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதில் இருவரும் மாலையும் கழுத்துமாய் உள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி என்ட்ரி கொடுக்கும் போதே பர்ஃபாமன்ஸுடன் வருகிறார்.

கன்னுக்குட்டியும் தாத்தாவும்
இந்த போட்டோவை வைத்து பார்க்கும் போது, இருவரும் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இருவரும் ஆடியிருப்பதாக தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், கன்னுக்குட்டியும் தாத்தாவும் செம க்யூட் என புகழ்ந்துள்ளனர்.

ஏன் அவருடன் எடுக்கவில்லை?
மேலும் பிக்பாஸில் உங்கள் இருவரின் டான்ஸும் அல்ட்டிமேட் என்றும் பாராட்டியுள்ளனர். அதேநேரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி சனம் ஷெட்டியுடன் இதுவரை ஒரு போட்டோ கூட எடுத்து ஷேர் பண்ணாததை கவனித்த நெட்டிசன்ஸ், ஏன் சனம் ஷெட்டியுடன் மட்டும் போட்டோ எடுக்கவில்லை என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











