தாத்தா பேத்தி பாண்ட்.. ஷிவானியுடன் சுரேஷ் தாத்தா.. செம க்யூட்.. வைரலாகும் "அன்பு" போட்டோ!
சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தியும் ஷிவானியும் சேர்ந்திருக்கும் க்யூட் போட்டோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதி நிறைவடைந்தது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் சுவாரசியம் சற்று குறைவாகத்தான் இருந்தது.
அதோடு பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் போட்டுக் கொண்ட சண்டை பார்வையாளர்களையும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது.

ஏ சர்ட்டிஃபிகேட் கொடுங்கள்
குறிப்பாக பாலாஜி முருகதாஸ், ஆரியிடம் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்கள் பலருக்கு படபடப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏ சர்ட்டிஃபிகேட் கொடுங்கள் என்று கோரிக்கை விடுக்கும் அளவுக்கு ஆனது நிலைமை.

வெளியே வந்த பிறகும்
இந்த பிக்பாஸ் சீசனிலும் குரூப்பிஸம் பச்சையாக தெரிந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை மட்டுமின்றி வெளியே வந்த பிறகும் குருப்பிஸத்தை கச்சிதமாக ஃபாலோ செய்து வருகின்றனர் அன்பு கேங்கை சேர்ந்த போட்டியாளர்கள்.

பிக்பாஸ் கொண்டாட்டம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே பங்கேற்றனர். பிக்பாஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்களின் போட்டோக்களை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

ஷிவானி மிஸ்ஸானார்
இதில் பலர் ஷேர் செய்த போட்டோக்களில் ஷிவானி மிஸ்ஸானார். இதனால் கவலைப்பட்ட ஷிவானியின் ரசிகர்கள் ஷிவானியின் போட்டோவை ஷேர் செய்யுமாறு கெஞ்சினர். இதனை தொடர்ந்து ரேகா பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஷிவானியுடன் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்தார்.

காதில் ஏதோ சொல்கிறார்
அதனை பார்த்த ரசிகர்கள் ரேகாவுக்கு நன்றி கூறினர். இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி ஷிவானி மற்றும் ஆரியுடன் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இதில் ஆரியை அணைத்தப்படி அவரது காதில் ஏதோ சொல்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

தாத்தா பேத்தி பாண்ட்
இதேபோல் ஷிவானி நாராயணனையும் அணைத்தப்படி எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். பார்க்கவே அவ்வளவு க்யூட்டாக உள்ளது அந்த போட்டோ. அதனை பார்த்த ரசிகர்கள் தாத்தா பேத்தி பாண்ட் செம என புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











