ஆரியின் தங்கத்தை ஆட்டைய போட்ட தாத்தா.. பங்குக்கேட்ட ஆஜித்.. போட்டுக் கொடுத்த ஷிவானி!
சென்னை: தங்கம் சேகரிக்கும் டாஸ்க்கின் போது, ஆரி சேகரித்து வைத்திருந்த தங்கத்தை நைசாக திருடி விட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் டெய்லி டாஸ்க்காக நேற்று தங்கம் சேகரிக்கம் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் ஹவுஸ்மேட்ஸ் 4 பேர் கொண்ட குழுக்களாக தங்க சுரங்கம் இருக்கும் அறைக்குள் சென்று அங்கு கொட்டிக் கிடக்கும் தங்கத்தை சேகரிக்க வேண்டும்.

பெரிய பலன்
அப்படி அதிகமாக தங்கம் சேகரிக்கும் போட்டியாளருக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும் என்று கூறினார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை பொறுக்கினர் ஹவுஸ்மேட்ஸ்.

திருடிய சுரேஷ்
தங்கத்தை ஓடி ஓடி போய் பொறுக்கிய டையர்டில் பெட்டில் தங்கத்தை வைத்துக்கொண்டே தூங்கிவிட்டார் ஆரி. அதனை பார்த்த சுரேஷ் சக்கரவர்த்தி, நைசாக அதை திருடி விட்டார்.

பங்கு கேட்ட ஆஜித்
அவருடன் ஆஜித் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் கூட்டாக சேர்ந்தனர். தொடர்ந்து தங்கத்தை பாத்ரூமில் ஒளித்து வைத்தார் தாத்தா. அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த ஆஜித் தனக்கும் பாதி பங்கு வேண்டும் என்றார்.

போட்டுக்கொடுத்த ஷிவானி
அதற்கு கட்டாயம் தருகிறேன் என்றார் சுரேஷ் சக்கரவர்த்தி. பின்னர் தனது தங்கம் திருடப்பட்டதை அறிந்த ஆரி, கார்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கும் ஷிவானியிடம் யார் என் தங்கத்தை எடுத்தது என்று கேட்டார்.

யார் பிரித்தார்கள்
அதற்கு தாத்தாவும் ஆஜித்தும்தான் என்று கூறினார் ஷிவானி. மேலும் யார் பிரித்துக்கொண்டது என்று தெரியாது, ஆனால் அவர்கள்தான் எடுத்தார்கள் என்றார் ஷிவானி.


Click it and Unblock the Notifications











