ப்பா.. எவ்ளோ பெரிய வார்த்தை.. அஜித் குறித்து அப்படி சொன்ன மொட்டை தாத்தா சுரேஷ்.. வைரல் வீடியோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி அஜித் குறித்து அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் திரை பிரபலங்களில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி. அழகன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள சுரேஷ் சக்கரவர்த்தி ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

அதோடு சக்ஸ் கிட்சன் என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவர், ரொம்பவே நேர்மையாக விளையாடி வருகிறார்.

டீம் ஸ்பிரீட்

டீம் ஸ்பிரீட்

ஹவுஸ்மேட்ஸ் என்னதான் அவரை கார்னர் செய்து அசிங்கப்படுத்தினாலும் அடுத்த நிமிஷமே எல்லாத்தையும் மறந்து பழையப்படி பழகி வருகிறார். அனிதா, சனம் ஷெட்டி, ரியோ, பாலாஜி, அர்ச்சனா, வேல்முருகன் என அனைவரும் அவரை அவமானப்படுத்திய போதும் டீம் ஸ்பிரீட்டை காட்டி வருகிறார்.

அஜித் மகாத்மா

அஜித் மகாத்மா

இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அஜித்தின் படத்தை காட்டி தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி 'அஜித் ஒரு மகாத்மா' என்றும், மகாத்மா என்ற டைட்டிலுக்கு பொருத்தமானவர் அஜித் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.

முகத்தை பார்த்தாலே தெரியும்

முகத்தை பார்த்தாலே தெரியும்

மேலும் பேசியுள்ள அவர், சிலர் செய்கையால் அவர்கள் நல்லவர்கள் என்பது நமக்கு தெரிய வரும். ஆனால் அஜித் வரும்போதே அவரிடம் ஒரு பிரகாசம் ஏற்படும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற வகையில் அவர் முகத்தை பார்த்தாலே அவர் நல்லவர் என்பதை கண்டுபிடித்துவிடலாம் என கூறியுள்ளார்.

நிகழ்ச்சிக்காக இயக்கியுள்ளேன்

நிகழ்ச்சிக்காக இயக்கியுள்ளேன்

திரையுலகில் உள்ள யாரிடம் கேட்டாலும் அஜித்தை பற்றி ஒருவர் கூட தவறாக சொல்ல மாட்டார்கள். அவர் பெரிய ஸ்டாராக இருந்தாலும் அவரது எளிமைதான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அஜித்தை நான் ஒரு நிகழ்ச்சிக்காக இயக்கியுள்ளேன்.

கள்ளங்கபடம் இல்லாமல்

கள்ளங்கபடம் இல்லாமல்

அப்போது அவர் என்னிடம் நிறைய பேசியுள்ளார். குழந்தை போல் கள்ளங்கபடம் இல்லாமல் பேசினார். மேலும் அவருடன் தான் ஒரு படம் நடித்துள்ளதாக கூறியுள்ள அவர், தாங்கள் இரண்டாவதாக ஒரு படத்தில் நடிக்க இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து தங்களை தூக்கிவிட்டதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X