அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சமையல் கலைஞரான சுரேஷ் சக்கரவர்த்தி ச்சாக்ஸ் கிட்சன் என்ற சமையல் நிகழ்ச்சிக்கான யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

பிரபலமான தாத்தா
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி பல இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடினார். இதனால் தாத்தா தாத்தா என சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமானார்.

வருத்தப்பட்ட சுரேஷ்
ஃபினாலே வாரத்தில் மற்ற ஹவுஸ்மேட்ஸ் வந்த போது கூட கடைசி நபராகத்தான் சுரேஷை ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்தனர். கடைசி நபராக தன்னை அழைத்ததை நினைத்து சமூக வலைதள பக்கத்தில் வருத்தப்பட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.

ரசிகர்கள் குழப்பம்
இந்நிலையில் நேற்றைய ஃபினாலே நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி, கமலுடன் 5 நாட்கள் ஸ்பெஷல் குக்காக பயணித்த அனுபவத்தை பகிர்ந்தார். இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள டிவிட் ஒன்று ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

காயப்படுத்துகிறது..
அதாவது, சட்டம், ஒப்பந்தங்கள் ஆகியவை சில நேரங்களில் அல்லது பல நேரங்களில் நம்மை மிகவும் காயப்படுத்துகிறது. ஆனால் 'ஆண்டவர்' போன்ற தூய்மையான ஆன்மாக்கள் இருப்பது நமக்கு நல்ல மருந்தாக உள்ளது.. நன்றி தலைவரே என்று கூறியுள்ளார்.

மிரட்டினார்களா?
இதனை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் அக்ரிமென்ட்டை காட்டி விஜய் டிவி உங்களை மிரட்டியதா தாத்தா? என்று கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்ட்டிசிபேட் பண்ணுங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











