செம்ம க்யூட்.. திருட்டுப் பாட்டி கெட்டப்பில் சுரேஷ் சக்கரவர்த்தி.. சிரிப்பால் சிதறிய பிக்பாஸ் வீடு!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் சுரேஷ் சக்கரவர்த்தி திருட்டுப் பாட்டி கெட்டப்பில் ரகளை செய்த அன்சீன் வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விடவும் ரொம்பவே சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.
நாள் தோறும் ஏதாவது சண்டை சர்ச்சை வம்பு தும்பு என களைக்கட்டியுள்ளது பிக்பாஸ் சீசன் 4.

ஒரு ஏக்கம் இருந்தது
இருந்த போதும் கடந்த சீசனில் சாண்டி மாஸ்டர் எண்டெர்டெய்ன் செய்த அளவுக்கு யாரும் பிக்பாஸில் என்டெர்டெயின் செய்யவில்லை என ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அவரவர் வேலையை மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் பேச்சு இருந்தது.

அன்சீன் காட்சிகள்
இந்நிலையில் 23 ஆம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்களை உச்சி குளிர வைத்துள்ளது. அதாவது, எந்த டாஸ்க் என்றாலும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்கும் சுரேஷ் சக்கரவர்த்தியின் அன்சீன் காட்சிதான் அது.

திருட்டுப் பாட்டி
மைகேல் மதன காமராஜன் படத்தில் பழம் பெரும் நடிகை ராஜலட்சுமி நடித்த திருட்டுப்பாட்டி கதாப்பாத்திரத்தில் பட்டைய கிளப்பியிருந்தார். அவர் ஒரு இடத்தை கடந்து சென்றாலே அங்கு இருக்கும் பொருட்கள் மாயமாகிவிடும் அப்படி ஒரு ரோலில் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார்.

சுரேஷ் ரகளை
அந்த கதாப்பாத்திரத்தை தனக்கு தரவில்லை என்று நடிகர் நாகேஷ் கமலிடம் கோபித்துக்கொண்டதாக கூட ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் கமல். இந்நிலையில் அந்த சிறப்புமிக்க கேரக்டரை பிக்பாஸ் வீட்டுக்குள் செய்து ரகளை செய்திருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

லேடி இல்லடி பாட்டியாக்கும்
அந்த பாட்டியை போலவே கண்ணாடி, தலையில் முக்காடு என போட்டு பட்டையை கிளப்பியிருக்கிறார். அந்த வீடியோவில் ரம்யாவிடம் நான் லேடி இல்லடி பாட்டியாக்கும் என்று கூறும் சுரேஷ் எதையாவது திருடலாமா என நோட்டம் விடுகிறார்.

சிரித்தப்படியே ஓட்டம்
அவரை பார்த்து பார்த்து ரசிக்கும் ரம்யா பாண்டியன் செம க்யூட் என சிரிக்கிறார். மற்ற பெண் ஹவுஸ்மேட்ஸ் அவரை பார்த்து சிரித்தப்படியே ஓட்டம் பிடிக்கின்றனர். இந்தக் காட்சி கடந்த சீசனில் சாண்டி, மோகன் வைத்யாவை வச்சு செய்ததை ஞாபகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











