அச்சச்சோ.. இது என்ன புதுக்கதை.. பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போறது இவர்தானாமே!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாரம் தோறும் ஒரு போட்டியாளர் வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது.

30 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இதுவரை மூன்று எவிக்ஷன்களை சந்தித்துள்ளது.

 காப்பாற்றிய எவிக்ஷன் ஃபிரி பாஸ்

காப்பாற்றிய எவிக்ஷன் ஃபிரி பாஸ்

அதன்படி முதல் ஆளாய் நடிகை ரேகாவும் மூன்றாவது எவிக்ஷனாக பாடகர் வேல்முருகனும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினர். ஆனால் இரண்டாவது எவிக்ஷனில் இடம் பெற்ற ஆஜித், தன்னிடம் இருந்த எவிக்ஷன் ஃபிரி பாஸை பயன்படுத்தி எஸ்கேப்பாகி விட்டார்.

எகிறிய எதிர்பார்ப்பு

எகிறிய எதிர்பார்ப்பு

இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை 2 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

நாமினேஷனில் 7 பேர்

நாமினேஷனில் 7 பேர்

அதற்கேற்றார் போல் இந்த வாரம் பிக்பாஸ் நாமினேஷன் புராசஸில் 7 போட்டியாளர்கள் இடம் பெற்றனர். ஆரி, பாலாஜி, சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா, சோம சேகர், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளனர்.

கன்டென்ட் கொடுப்பவர்கள்

கன்டென்ட் கொடுப்பவர்கள்

இந்த 7 போட்டியாளர்களுமே மிகவும் முக்கியமான போட்டியாளர்களாக பார்க்க படுகிறார்கள். இவர்களில் சோம சேகரை தவிர்த்து மற்ற 6 போட்டியாளர்களுமே நல்ல கன்டென்ட் கொடுப்பவர்கள்.

கன்டென்ட்டுக்கு கஷ்டம்

கன்டென்ட்டுக்கு கஷ்டம்

அவர்களில் குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா, பாலாஜி, சனம், அர்ச்சனா ஆகியோர் நாள்தோறும் ஏதாவது ஒரு கன்டென்ட்டை கொடுத்து குதூகலப்படுத்தி வருகின்றனர். மற்ற 6 போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது சோம சேகர்தான் கன்டென்ட் கொடுக்க கஷ்டப்பட்டு வருகிறார்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

இதனால் சோம சேகர்தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை வரையிலான வாக்கு எண்ணிக்கையிலும் சோம சேகர்தான் பின்தங்கியிருப்பதாக கூறப்பட்டது.

சுரேஷ் ஜோசியம்

சுரேஷ் ஜோசியம்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடந்த மார்னிங் டாஸ்க்கில் கூட சோம சேகரின் நிலைமைதான் மோசமாக உள்ளது என ஜோசியம் கூறினார் சுரேஷ் சக்கரவர்த்தி. இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சோம சேகர்தான் வெளியேறுவார் என கூறப்பட்டது.

சுரேஷ் தாத்தா?

சுரேஷ் தாத்தா?

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் தாத்தா தான் வெளியேற வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

நம்ப தகுந்த வட்டாரம்

நம்ப தகுந்த வட்டாரம்

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. இருந்த போதும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அப்படி வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மையாகியிருப்பதால் இந்த தகவலும் உண்மையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இருப்பினும் இன்று மாலை இது குறித்த உறுதியான தகவல் வெளியாகிவிடும். இதனிடையே சென்டிமென்ட், சண்டை, அன்பு, பாசம் என ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து ஹீரோவாக வலம் வரும் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற போகிறார் என்ற தகவல் ரசிகர்களை சற்று அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அனல் பறக்கும் எபிசோடு

அனல் பறக்கும் எபிசோடு

இதனிடையே சனம் ஷெட்டியை தரக்குறைவாக பேசிய பாலாஜி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அவரை கமல் கண்டிக்க வேண்டும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றனர். இதனால் இந்தவாரம் கமல் பங்கேற்கும் எபிசோடுகள் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X