No Need என சொல்லவில்லை.. அஜித் தரப்பு அதிரடி விளக்கம்.. அதுக்குள்ள அரசியல் டிராமா!
சென்னை: நடிகர் அஜித் குமார் முதல் ஆளாக தனது வாக்கினை செலுத்தி விட்டுச் சென்றார். மீடியாக்கள் மைக் நீட்டும் போது கூட அவர் அவற்றை கண்டுக் கொள்ளாமல் கடந்து சென்ற வீடியோக்கள் தான் வெளியாகின. ஆனால், திடீரென அஜித் குமாரிடம் மாற்றம் வேண்டுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதாகவும் "No Need" என அவர் சொன்னதாகவும் சில செய்தி நிறுவனங்கள் கார்டு போட்டதாக வதந்திகள் பரவின.
இதையடுத்து மு.க. ஸ்டாலினிடமும் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சிலர் திட்டமிட்டே கேள்வி எழுப்ப, அவரும் அது நல்ல விஷயம் தானே என பேசி மைலேஜ் ஏற்ற பார்த்தார்.

இந்நிலையில், அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அஜித் குமார் அதுபோன்று எதுவும் சொல்லவில்லை என அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளது விஜய் ரசிகர்களையும் தவெக தொண்டர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
துபாயில் இருந்து சென்னை வந்த அஜித் குமார்: கார் ரேஸில் பிசியாக இருந்து வந்த அஜித் குமார் தனது ஜன நாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று வந்தார். அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. அஜித் குமார் இன்று காலை 6.50 மணிக்கே திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
No Need என சொன்னாரா அஜித்?: அஜித் குமார் வாக்கு செலுத்திவிட்டு வெளியே வரும் போது ஏகப்பட்ட பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு கேள்விகளை எழுப்பினர். ஆனால், யாருக்கும் பதில் சொல்லாமல், தனது ரசிகர்களுக்கு மட்டும் கை அசைத்துவிட்டு அஜித் குமார் தனது வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார். ஆனால், அஜித் குமார் தமிழ்நாட்டுக்கு மாற்றம் வேண்டுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு "No Need" எனக் கூறியதாக சில கார்டுகள் வைரலாகின.
மு.க. ஸ்டாலின் சொன்ன வார்த்தை: அஜித் குமார் தமிழ்நாட்டுக்கு மாற்றம் தேவையில்லை என்றும் திமுக ஆட்சியே தொடரட்டும் என்பதற்காகத்தான் No Need என்று சொன்னதாக சில செய்தியாளர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்ப, அஜித்தின் கருத்து நல்லது தானே என ஸ்டாலின் பேசிவிட்டுச் சென்றார்.
அஜித் மேனேஜர் விளக்கம்: இந்நிலையில், அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அஜித் குமார் அப்படி எதுவும் சொல்லவில்லை என்றும் தவறான நோக்கத்துடன் சிலர் திரித்து பரப்பி வருகின்றனர் என்றும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications