விடாமுயற்சி படத்துல அஜித் -திரிஷா கேரக்டர் என்ன தெரியுமா.. சுரேஷ் சந்திரா சொன்னத பாருங்க!

சென்னை: நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் என முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே அசர்பைஜானில் துவங்கிய நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து ஆறு மாத காலங்கள் முடங்கியது.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் அசர்பைஜானிலேயே துவங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரு வார காலம் இந்த படத்தின் சூட்டிங் அசபைஜானிலேயே நடக்க உள்ளதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித் மற்றும் திரிஷாவின் கேரக்டர்கள் குறித்த அப்டேட்டையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Ajithkumar Trisha Vidaamuyarchi

நடிகர் அஜித்: நடிகர் அஜித்குமார், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் அசர்பைஜானில் கடந்த 24ம் தேதி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கப்பட்ட நிலையில் இடையில் ஆறு மாதங்கள் படத்தின் சூட்டிங் முடங்கியது. இந்நிலையில் இந்த ஷூட்டிங்கிற்காக காத்திருந்த அஜித்குமார், இடையில் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் இணைந்ததை பார்க்க முடிந்தது. அந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்த நிலையில் முதல் கட்ட சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தற்போது மீண்டும் விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளார் அஜித்.

அசர்பைஜான் சூட்டிங்: கடந்த 24ம் தேதி துவங்கிய இந்த சூட்டிங்கில் அஜித்துடன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் அர்ஜுன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில் 2 அல்லது 3ம் தேதி படத்தின் சூட்டிங்கில் நடிகை திரிஷாவும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் சூட்டிங் இரண்டு வாரங்கள் அசர்பைஜானில் நடக்கவுள்ள நிலையில் இதையடுத்து சென்னை அல்லது மும்பையில் சில பேட்ச் வேலைகளையும் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படத்தில் அஜித் மற்றும் த்ரிஷாவின் கேரக்டர் குறித்த அப்டேட்டை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அஜித் -திரிஷா கேரக்டர்கள்: படத்தில் அஜித் மற்றும் திரிஷா இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யம் இந்த படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் அஜித் மிகவும் புத்திசாலியாக நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு வரும் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார் அஜித். இதனிடையே விடாமுயற்சி படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது சமீபத்திய பேட்டியில் உறுதிப் படுத்தியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அடுத்தடுத்த படங்கள்: இதனிடையே அடுத்ததாக குட் பேட் அக்லி படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில மாத இடைவெளிகளில் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அஜித்தின் துணிவு படம் ரிலீசான நிலையில் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் அவரது அடுத்த படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்த நிலையில் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களின் சூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X