Actor Ajithkumar: அஜித் இவ்வளவு ரிஸ்க் எடுக்கறாரு.. ஆனா.. சுரேஷ் சந்திரா விளக்கம்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அசர்பைஜானில் நடந்த நிலையில் அங்கு காலச்சூழல் படப்பிடிப்பை நடத்த சரியாக இல்லாத காரணத்தால் படத்தின் சூட்டிங்கை அங்கே நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்நிலையில் தற்போது மீண்டும் இம்மாதம் பத்தாம் தேதி முதல் இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்க உள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லைகா மற்றும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர் படத்தில் அஜித்தின் ரிஸ்க்கியான கார் சேஸிங் காட்சியை வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த அளவிற்கு ரிஸ்க் எடுக்க தேவையில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவர் அதிகமாக மெனக்கெடாமல் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது விடாமுயற்சி படத்திற்காக மிகப்பெரிய அளவில் அவர் ரிஸ்க் எடுத்து வருவது ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் டிராப் ஆகிவிட்டதாக முன்னதாக சமூகவலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அஜித்தின் இந்த வீடியோவை வெளியிட்டு, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சுரேஷ் சந்திரா.

Suresh chandran explained why he shared Ajith s car skidded while shooting

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில வாரங்கள் தொடர்ந்து நடந்தது. இதனிடையே இந்த படத்தின் ஷூட்டிங்கை அங்கு தொடர முடியாத அளவிற்கு பனிமழை உள்ளிட்டவை ஏற்பட்டது. இதனால் சில தினங்கள் அங்கேயே காத்திருந்த படக்குழுவினர் தொடர்ந்து அங்கிருந்து ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பினர். இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இதனால் படம் ட்ராப்பானதாக சமூக வலைதளங்களில் பரவலாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த படத்துக்கு திரிஷா கொடுத்த கால்ஷீட் வீணாகியுள்ள சூழலில் அவரும் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கார் வீடியோ: இந்நிலையில் இந்த படத்தின் கார் சேஸிங் காட்சி ஒன்றை தற்போது சுரேஷ் சந்திரா மற்றும் லைகா இரு தரப்பினரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இதில் மிகவும் ரிஸ்க் எடுத்து அஜித் நடித்துள்ளார். ஆரவ் இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படும் சூழலில் அவரை காரில் கட்டி வைத்து அஜித் இந்த ரிஸ்க்கான காட்சியில் நடித்து முடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் சென்ற இந்த கார் பள்ளத்தில் விழுந்ததால் படக்குழுவினர் பதற்றம் அடைந்தனர். இதனிடையே இந்த வீடியோவை வெளியிட முக்கியமான காரணம் உள்ளதாக அவர் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

சுரேஷ் சந்திரா பேட்டி: சுரேஷ் சந்திரா அளித்துள்ள பேட்டியில், விடாமுயற்சி படத்திற்காக அஜித் இதுபோன்று மிகவும் ரிஸ்க் எடுத்து அடுத்தடுத்த காட்சிகளில் நடித்து வருகிறார். ஆனால் இந்தப்படம் டிராப்பானதாக தொடர்ந்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது படக்குழுவினருக்கு மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் இந்த வீடியோவை வெளியிட்டால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் படக்குழுவினரும் மிகுந்த உற்சாகமடைவார்கள் என்று நினைத்ததாகவும் அதனால் தற்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் பிறந்தநாளில் அப்டேட்கள்: விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் அஜித். இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தாமதமானதால், படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் படத்தின் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அஜித் பிறந்தநாளில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X