twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலியல் மற்றும் போதை குற்றங்களுக்கு எதிராக....சுரேஷ் இயக்கத்தில் அகடு

    |

    சென்னை: சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு. இதில் சார்பட்டா பரம்பரை புகழ் "டாடி" ஜான் விஜய், அஞ்சலி நாயர்,சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    புதுமுக இயக்குனர் எஸ். சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.

    நம்ம தீபாவளி நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி போயிருக்கு... வெங்கட் பிரபு ட்வீட் நம்ம தீபாவளி நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி போயிருக்கு... வெங்கட் பிரபு ட்வீட்

    ஒரு பயணத்தின் போது புதிய நட்புகள் கிடைக்கிறார்கள். அந்த பயணத்தை மறக்க முடியாத பயணமாக மாற்றுகிறார்கள் அந்த புதிய நட்புகள்.நம்மோடு நன்றாக பழகியவர்கள், எதிர் பாராத ஒரு நிமிடத்தில் நம் வாழ்வையே கலைத்துப்போட்டால்...என்ன நடக்கும் என்பது தான் படத்தின் மைய கதை .

    அழுத்தம் திருத்தமாக

    அழுத்தம் திருத்தமாக

    போதை என்பது அப்படித்தான். எப்படிப்பட்ட நட்பையும் போதை முறித்துவிடும், எப்படிப்பட்ட உறவையும் போதை அழித்துவிடும். போதை என்பது மற்றவர்களை அழிப்பதோடு தன்னையும் அழித்துக்கொள்ளவே வழிவகுக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக பேச வருகி

    13 வயது சிறுமிக்கு

    13 வயது சிறுமிக்கு

    பாலியல் குற்றங்களுக்கு எதிராக அகடு திரைப்படம் உருவாகி வருகிறது. கொடைக்கானலுக்கு நான்கு இளைஞர்கள் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு சுற்றுலா வந்த 13 வயது சிறுமிக்கு நான்கு இளைஞர்களால் எதிர்பாராத ஒரு கொடூர செயல் நடைபெறுகிறது. அச்சிறுமிக்கு என்ன நடந்திருக்குமோ என்று எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

    கபிலன் பாடல்கள்

    கபிலன் பாடல்கள்

    சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவராஜ்சிங்காரவேலு,சஞ்சீவ் இணை தயாரிப்பு செய்திருக்கிறார். ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார். அகடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் வெளியாக இருக்கிறது.

    வாசகம் மட்டும்

    வாசகம் மட்டும்

    போதை என்பது எவ்வளவு ஆபத்தானது என்று பல முறை பல விதமாக பல திரைப்படங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடங்கள் எடுத்தாலும் யாரும் திருந்தியதாக தெரியவில்லை . குடி குடியை கெடுக்கும் என்ற வாசகம் மட்டும் தான் மனதில் இருக்கிறது. ஆனால் அதன்'வலி மற்றும் பின்விளைவுகளை திரும்ப திரும்ப சொன்னால் தான் அனைவருக்கும் புரியும் என்று அகடு படத்தின் குழுவினர் முடிவெடுத்து உள்ளனர் .

    English summary
    Suresh Direction Aagadu Movie based on sex and drug offenses
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X