ஷங்கர் படத்தில் வில்லனாகும் மலையாள டாப் ஹீரோ
ஐதராபாத் : ராம் சரணை வைத்து டைரக்டர் ஷங்கர் பான் இந்தியன் படம் ஒன்றை இயக்கி வருகிறார். மெகா பட்ஜெட் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஆர்சி 15 என பெயரிடப்பட்டுள்ளது.
ராம் சரணின் 15 வது படமான இதை தில் ராஜு தயாரித்து வருகிறார். இது இவரின் 50 வது படமாகும். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கரும் ஒரு ரோலில் நடித்து நடிப்பதாக கூறப்படுகிறது.

மற்றொரு மலையாள நடிகர்
ஆர்சி 15 படத்தில் முக்கிய ரோலில் மலையாள நடிகர் ஜெயராம் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு மலையாள நடிகரும் இணைய உள்ளாராம்.

வில்லனாகும் சுரேஷ் கோபி
லேட்டஸ்ட் தகவல்களின்படி சுரேஷ் கோபி நடிப்பதாகவும், புனேவில் துவங்க உள்ள முதல் கட்ட படப்பிடிப்பில் சுரேஷ் கோபியும் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சுரேஷ் கோபி வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் பட வில்லன்
இதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் சுரேஷ் கோபி வில்லனாக நடித்துள்ளார். அதற்கு முன் அஜித் நடித்த தீனா உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார் சுரேஷ் கோபி.

அரசியல்வாதி ரோலில் சுரேஷ் கோபி
நிஜத்தில் முன்னாள் எம்பி.,யான சுரேஷ் கோபி, ஆர்சி 15 படத்தில் அரசியல்வாதி ரோலில் தான் நடிக்கிறாராம். நிஜ வாழ்க்கையில் அவர் அரசியலில் ஈடுபடுவது போன்ற கேரக்டரில் தான் இந்த படத்திலும் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் ஹீரோ ராம் சரண், ஐஏஎஸ் அதிகாரி ரோலில் நடிக்கிறாராம்.

சோஷியல் மெசேஜ் கதை
சில சமூக பிரச்சனைகளை பேசுவதாக ஆர்சி 15 படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம், அஞ்சலி, சுனில், நவீன் சந்திரா, ரகுமான், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

பல மொழிகளில் ரிலீஸ்
ஆர்சி 15 படத்திற்கு தமான் தான் இசையமைக்கிறார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50 வது படமான இது, பல்வேறு இந்திய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











