Suresh Gopi Daughter: மம்மூட்டி முதல் மீனா வரை.. களைகட்டிய சுரேஷ் கோபி மகள் திருமண வரவேற்பு விழா!

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம் சமீபத்தில் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. அந்த திருமண விழாவில் பிரதமர் மோடி மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட காட்சிகள் டிரெண்டாகின. எளிமையான முறையில் கோயிலில் திருமணம் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் கிராண்ட் ரிசப்ஷன் நிகழ்ச்சியும் நடைபெற பல பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார், லைலா நடித்த தீனா படத்தில் அஜித்துக்கு அண்ணனாக ஆதிகேசவன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சுரேஷ் கோபி. மேலும், சியான் விக்ரமின் ஐ படத்திலும் இவர் தான் வில்லன்.

Suresh Gopi Daughter reception: From Mammootty to Meena several celebrities attended the function

குருவாயூரில் திருமணம்: மலையாள நடிகர் சுரேஷ் கோபி ராதிகா நாயர் என்பவரை 1990ல் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு மொத்தம் 5 குழந்தைகள். அதில், சுரேஷ் கோபியின் மகள் பாக்யா சுரேஷ் கடந்த ஜனவரி 17ம் தேதி காலை குருவாயூர் கோயிலில் ஸ்ரேயாஸ் மோகன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். குருவாயூர் கோயிலில் காலை 8.45 மணிக்கு நடந்த திருமணத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்.

மம்மூட்டி மீது சோதனை: பிரதமர் மோடி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க குருவாயூர் கோயில் வந்த நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களையும் சோதனை செய்து உள்ளே அனுப்பிய காட்சிகள் இணையத்தில் தீயாக பரவின. மம்மூட்டியை மட்டுமே தீவிரமாக சோதனை செய்தார்கள் என்றும் மோகன்லாலை அப்படியே விட்டு விட்டார்கள் என்றும் சர்ச்சைகளும் வெடித்தன.

Suresh Gopi Daughter reception: From Mammootty to Meena several celebrities attended the function

மோடியை வணங்காத மம்மூட்டி: மேலும், திருமண விழாவுக்கு வருகை தந்த மலையாள திரையுலகினரையும் மோடி சந்தித்தார். அப்போது மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் மோடியை பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் தெரிவித்தனர். ஆனால், மம்மூட்டி கைகளை கட்டிக் கொண்டு மட்டுமே நின்றார். வணக்கம் தெரிவிக்கவில்லை என இன்னொரு சர்ச்சையும் வெடித்தது.

திருமண வரவேற்பு விழா: குருவாயூர் கோயிலில் பாக்யா சுரேஷ் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில், சினிமா பிரபலங்களுக்கு பெரிய விருந்து அளிக்க விரும்பிய சுரேஷ் கோபி பிரம்மாண்ட திருமண மண்டபத்தில் சமீபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.

Suresh Gopi Daughter reception: From Mammootty to Meena several celebrities attended the function

குடும்பத்துடன் பங்கேற்ற மம்மூட்டி: திருமணத்தில் கலந்து கொண்ட மம்மூட்டி தனது நண்பர் சுரேஷ் கோபியின் மகள் ரிசப்ஷனில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட புகைப்படம் மம்மூக்கா ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. துல்கர் சல்மானும் கலந்து கொண்ட போட்டோக்களும் வெளியாகி உள்ளன. தொடர்ந்து 70 வயதை கடந்த நிலையிலும் வருடத்திற்கு 5 படங்களில் நடித்து வருகிறார் மம்மூட்டி.

மீனாவும் கலா மாஸ்டரும்: ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் படையெடுத்த சுரேஷ் கோபி மகளின் ரிசப்ஷனில் நடிகை மீனா நடன இயக்குநரும் தனது நெருங்கிய தோழியுமான கலா மாஸ்டருடன் கலந்து கொண்ட போட்டோவை தற்போது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X