வேட்பாளராக அறிவிக்கப்படும் சமயத்தில் நிமோனியா பாதிப்பு...சுரேஷ் கோபி மருத்துவமனையில் அனுமதி

கொல்லம் : நடிகரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுரேஷ் கோபி, நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எர்ணாகுணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Suresh Gopi hospitalised due to pneumonia amidst candidate selection

சுரேஷ் கோபி தற்போது பாப்பன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜோசி இயக்கும் இப்படத்தின் சூட்டிங் எர்ணாகுளம் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுரேஷ் கோபிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது சுரேஷ் கோபிக்கு ஏற்பட்டிருக்கும் நிமோனியா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற உள்ள கேரள சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் திருச்சூர் அல்லது திருவனந்தபுரம் தொகுதிகளில் சுரேஷ் கோபி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சமயத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள், ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X