பிறந்த நாளை முன்னிட்டு..பிரபல ஹீரோவின் 250வது பட லுக்கை வெளியிட்ட தயாரிப்பு..ரசிகர்கள் மகிழ்ச்சி

By

கொச்சி: பிரபல நடிகரின் 250 வது பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

V-CONNECT | DESIGNER GOPI PRASANNA RECREATES THE OLD MOVIE POSTERS | FILMIBEAT TAMIL

தமிழில், அஜித்தின் தினா, ராஜ்கபூர் இயக்கிய சமஸ்தானம், ஷங்கர் இயக்கிய ஐ உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள ஹீரோ சுரேஷ் கோபி.

இப்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் முடிந்துவிட்டது.

வரனே அவஷியமுண்டு

வரனே அவஷியமுண்டு

லாக்டவுனுக்குப் பிறகு வெளியாக இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக, படங்களில் நடிக்காமல் இருந்த சுரேஷ்கோபி, டிவி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதோடு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த படம், 'வரனே அவஷியமுண்டு'. அனுப் சத்யன் இயக்கியுள்ள இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ளார்.

நடிகை ஷோபனா

நடிகை ஷோபனா

இதில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷோபனாவும் நடித்திருந்தார். இதில் மேஜர் உன்னிகிருஷ்ணனாக வந்த சுரேஷ் கோபி கேரக்டர் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தப் பட ஹிட்டுக்குப் பிறகு சுரேஷ் கோபி நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர், மாத்யூஸ் தாமஸ் இயக்குகிறார். இது நடிகர் சுரேஷ் கோபிக்கு 250 வது படம்.

மாஸ் கேரக்டர்

மாஸ் கேரக்டர்

இதில், கடுவாகுன்னேல் குருவச்சன் என்ற மாஸ் கேரக்டரில் சுரேஷ் கோபி நடிக்கிறார். அவருக்கு இன்று 61 வது பிறந்தநாள். இதையடுத்து இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சுரேஷ் கோபி வெள்ளையும் கருப்பும் கலந்த தாடியுடன் கொஞ்சம் வயதான லுக்கில் இருக்கிறார். இந்த லுக் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

குடும்ப பிரச்னை

குடும்ப பிரச்னை

'கதைப்படி படத்தில் ஃபேமிலி சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் இருக்கும். படத்தில் கொஞ்சம் வயதான கேரக்டரில் இருக்கும் ஹீரோவுக்கு குடும்ப பிரச்னை இருக்கிறது. அதை அவர் மாஸாக எப்படி தீர்க்கிறார் என்று கதை செல்லும்' என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கிறதாம். லாக்டவுன் முடிந்த கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது.

இந்தி நடிகை

இந்தி நடிகை

சுரேஷ் கோபி ஜோடியாக நடிக்க, பிரபல இந்தி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 'பேச்சுவார்த்தை நடந்துவருவது உண்மைதான். இப்போது லாக்டவுன் இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிமாநில நடிகர், நடிகைகளின் கால்ஷீட் விவகாரங்களை உடனடியாக உறுத்தப்படுத்த முடியவில்லை' என்று படக்குழு தெரிவித்துள்ளது.

துப்பாக்கி

துப்பாக்கி

இதற்கிடையே சுரேஷ் கோபி நடிக்கும் காவல் என்ற படத்தின் டீசரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுரேஷ் கோபி கண்ணில் காயம்பட்டிருக்கிறது. வேட்டியின் பின்பக்கம் அவர் துப்பாக்கி வைத்திருக்கிறார். அதுவும் மிரட்டல் ஆக்‌ஷன் படம்தான் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது. இந்த டீசரையும் சுரேஷ் கோபி ரசிகர்கள், ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X