மிரட்டும் கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்ட பிரபல ஹீரோ மகன்... வைரஸ் பாதித்தவருடன் பயணித்ததால் சிக்கல்!

By

திருவனந்தபுரம்: லண்டனில் இருந்து வந்த தனது மகன் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல ஹீரோ தெரிவித்துள்ளார்.

Recommended Video

Actor & Dr.Sethu Last awarness Video | Zi CLinic | Dermatologist

தமிழில், முருகதாஸ் இயக்கிய தினா, ராஜ்கபூர் இயக்கிய சமஸ்தானம், ஷங்கர் இயக்கிய ஐ உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகர், சுரேஷ் கோபி.

இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடித்துள்ளார். இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இளைய மகன்

இளைய மகன்

நடிகர் சுரேஷ் கோபியின் மனைவி ராதிகா நாயர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் கோகுல் சுரேஷ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இளைய மகன் கொரோனா காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். அவர் தனியான பிளாட் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ள அவர், 'என் இளையமகன் லண்டனில் இருந்து வந்தார். அவர் வந்த விமானத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவரும் வந்திருந்தார். என் மகனுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் கடந்த சில நாட்களாகத் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு உணவு தனியாகக் கொண்டு செல்லப்படுகிறது.

எங்கும் செல்ல வேண்டாம்

எங்கும் செல்ல வேண்டாம்

கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ளதால் நானும் எங்கும் செல்லாமல் தனியாக வீட்டிலேயே இருக்கிறேன். பொதுமக்களும் வீட்டை விட்டு எங்கும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக, மலையாளப் படங்களில் நடிக்காமல் இருந்த சுரேஷ்கோபி, டிவி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதோடு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

ரீ என்ட்ரிக்கு வரவேற்பு

ரீ என்ட்ரிக்கு வரவேற்பு

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த மலையாள படம், 'வரனே அவஷியமுண்டு'. அனுப் சத்யன் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து, நடித்திருந்தார். இதில் சுரேஷ் கோபியின் கேரக்டருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது ரீ என்ட்ரியை ரசிகர்கள் பலரும் வரவேற்று இருந்தனர். ஐந்து வருடம் ஆனாலும் அந்த அசத்தல் நடிப்பு அவரிடம் அப்படியே இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X