twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடி கார் ரெஜிஸ்ட்ரேஷன்: வரி ஏய்ப்பு செய்த அஜீத் 'அண்ணன்'

    By Siva
    |

    திருவனந்தபுரம்: நடிகர் சுரேஷ் கோபி ஆடி காரை பதிவு செய்ய வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மலையாள செய்தி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.

    கேரளாவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள் இருவர் வரி ஏய்ப்பு செய்து தங்களின் சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்தது தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பது சுரேஷ் கோபி.

    பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி, பாஜக எம்.பி.யாக உள்ளார்.

    புதுச்சேரி

    புதுச்சேரி

    சுரேஷ் கோபி கடந்த 2010ம் ஆண்டு ஆடி க்யூ7 காரை வாங்கியுள்ளார். கேரளாவில் பதிவு செய்தால் ரூ. 15 லட்சம் வரி செலுத்த வேண்டும். இதனால் அவர் புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார்.

    சுரேஷ் கோபி

    சுரேஷ் கோபி

    புதுச்சேரியில் வெறும் ரூ. 1.5 லட்சம் கொடுத்து ஆடி காரை பதிவு செய்துள்ளார் சுரேஷ் கோபி. புதுச்சேரியில் வாடகைக்கு இருப்பதாக ஒரு முகவரியை அளித்து காரை பதிவு செய்துள்ளார்.

    வாடகை

    வாடகை

    அமலா பாலும் சரி, ஃபஹத் ஃபாசிலும் சரி புதுச்சேரியில் வாடகைக்கு இருப்பதாகக் கூறி தங்களின் பென்ஸ் கார்களை பதிவு செய்தனர். இருவருமே அந்த முகவரியில் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கிரண் பேடி

    கிரண் பேடி

    அமலா, ஃபஹத், சுரேஷ் கோபியின் விபரங்கள் வெளியே வந்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வரி ஏய்ப்பு குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.

    அண்ணன்

    அண்ணன்

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய தீனா படத்தில் சுரேஷ் கோபி அஜீத் அண்ணனாக நடித்திருந்தார். தற்போது தலைப்பை மீண்டும் படித்து பாருங்கள்.

    English summary
    After Amala Paul and Fahadh Faasil, actor cum BJP MP Suresh Gopi too evaded tax by registering his Audi car in Puducherry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X