Suresh Gopi: திருமண நகை குறித்து கிளம்பிய சந்தேகம்.. சமூக வலைதளத்தில் கொந்தளித்த சுரேஷ் கோபி!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம் சமீபத்தில் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பிரதமர் மோடி, மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த திருமண விழாவில் சுரேஷ் கோபி மகள் அணிந்திருந்த நகைகளுக்கு பில் இருக்கா என சோஷியல் மீடியாவில் சில நெட்டிசன்கள் கிளப்பிய சர்ச்சையான கேள்விகளுக்கு தற்போது சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த தீனா படத்தில் அஜித்துக்கு அண்ணனாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சுரேஷ் கோபி. சரத்குமாருடன் சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் ஐ பட வில்லன் என தமிழிலும் இவர் மிரட்டியிருக்கிறார்.

மலையாள நடிகர்: மலையாளத்தில் வெளியான ஓடையில் நின்னு படத்தின் மூலம் 1965ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சுரேஷ் கோபி. 1998ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான களியாட்டம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். மலையாளம் மட்டுமின்றி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர் சுரேஷ் கோபி. மோகன்லால், மம்மூட்டியின் நெருங்கிய நண்பரான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்துக்கு இருவரும் கலந்து கொண்ட காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
அஜித் படத்தில்: 1984ம் ஆண்டு வெளியான நிரபராதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அஜித்தின், தீனா படத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து இங்கேயும் பிரபலமானார். அந்த படத்தில் தீனாவின் அண்ணன் ஆதிகேசவனாக சுரேஷ் கோபி நடித்திருந்தார். அதன் பின்னர் சரத்குமாரின் சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த ஐ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், விஜய் ஆண்டனியின் தமிழரசன் மற்றும் ஆழி உள்ளிட்ட தமிழ் படங்கள் இவர் நடிப்பில் விரைவில் ரிலீஸாக உள்ளன.
பாக்யா சுரேஷ் திருமணம்: சுரேஷ் கோபி மற்றும் ராதிகா நாயர் தம்பதியினருக்கு மொத்தம் 5 குழந்தைகள். அதில், சுரேஷ் கோபியின் மகள் பாக்யா சுரேஷ் குருவாயூர் கோயிலில் ஸ்ரேயாஸ் மோகன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். குருவாயூர் கோயிலில் நடைபெற்ற திருமணத்தில் பிரதர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பாஜகவில் பெரிய பொறுப்பில் சுரேஷ் கோபி இருந்து வரும் நிலையி, மோடி அந்த திருமணத்தில் பங்கேற்று இருந்தார். மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களையே தீவிர பரிசோதனைக்குப் பின்னர் தான் உள்ளே அனுமதித்தனர்.
திருமண நகை குறித்து வதந்தி: குருவாயூர் கோயிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. பின்னர் பிரம்மாண்டமாக மண்டபம் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது. பிரதமர் மோடி முதல் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எல்லாம் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில், அவரது மகள் பாக்யா அணிந்த நகை எல்லாம் பரிசாக வந்த நகை தானே என்றும் அதற்கு எல்லாம் பில் இருக்கா? ஒழுங்கா ஜிஎஸ்டி கட்டியாச்சா என கேரளாவில் நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சுரேஷ் கோபி காட்டம்: இந்த விவகாரம் சுரேஷ் கோபி காது வரைக்கும் சென்ற நிலையில், கடுப்பான அவர், தனது சமூக வலைதள பக்கத்தில் என் மகள் அணிந்திருந்த அத்தனை நகைகளும் நானும் என் மகளின் தாத்தாவும் வாங்கிப் போட்ட நகைகள் என்றும் அதிலும் ஒரு நகை பீமா ஜுவல்லரியில் வாங்கப்பட்டது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இருந்து ஊழியர்கள் பிரத்யேகமாக அதை செய்துக் கொடுத்தனர். அனைத்துக்கும் ஜிஎஸ்டி கட்டி பில் வச்சிருக்கேன். என்னையும் என் குடும்பத்தையும் தேவையில்லாமல் வம்பிழுக்க வேண்டாம் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











