'சல்லியர்கள்' படம் புறக்கணிப்பு.. இதுவும் தீண்டாமை தான்.. நாசமா போயிடுவீங்க.. சுரேஷ் காமாட்சி வேதனை!
சென்னை: வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் 'சல்லியர்கள்'. இப்படத்தில் சத்யா தேவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் கருணாஸ், திருமுருகன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை மேதகு பட இயக்குநர் கிட்டு இயக்கி உள்ளார். இப்படத்தை வெளியிட போதிய தியேட்டர் கிடைக்காததால், படத்தை ஓடிடியில் வெளியிட இருப்பதாக சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
சல்லியர்கள் திரைப்படம் எடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தின் கதை எனக்கு பிடித்து போனதால், இந்த படத்தை நான் தயாரித்தேன். கடந்த மூன்று வருடமாகவே இந்த திரைப்படத்தை திரையிடுவதற்காக பலமுறை முயற்சி செய்து. ஆனால், சரியான திரையரங்குகள் எனக்கு கிடைக்காததால் படத்தை வெளியிட முடியாமல் போய்விட்டது. கடைசியாக இந்த வாரம் பெரிய படங்களில் எதுவும் வெளியாகதால் சல்லியர்கள் படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தோம். ஆனால், தமிழ்நாடு முழுக்க இந்த படத்தை திரையிடுவதற்கு வெறும் 27 தியேட்டர்கள் மட்டும்தான் கிடைத்தன. இவ்வளவு குறைவான தியேட்டரில் படத்தை படத்தை எப்படி வெளியிட முடியும். அதற்கு காரணம் சிறிய திரைப்படங்களுக்கு இவ்வளவு தான் தியேட்டர் கொடுக்க முடியும் என சொல்கிறார்கள். குறிப்பாக, இந்த மண்ணில் பிவிஆர் கார்ப்பரேட் பிசினஸ் செய்கிறார்கள். சல்லியர்கள் திரைப்படம் இந்த மண் சார்ந்த திரைப்படம், அப்படி இருக்கும்போது சல்லியர்கள் படத்தை புறக்கணிப்பது ஏன் என தெரியவில்லை.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி: கர்நாடக மாநிலத்தில் மண் சார்ந்த படத்திற்கு பிவிஆர் திரையரங்கு கொடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். ஆனால், நம் பெருந்தன்மையை, அவர்கள் முட்டாள்தனமாக நினைக்கிறார்கள். பிவிஆர் திரையரங்கு கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய மண் சார்ந்த இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான், எங்களது நோக்கம். இந்த படத்தை எடுக்கும் போதே, இது வியாபார ரீதியாக வெற்றி பெறாது என்று எங்களுக்கு நன்றாக தெரியும். இந்த படம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்திருந்ததால், இந்த திரைப்படத்தை எடுக்க வேண்டும் என நான் நினைத்தேன். இதற்காக திரையரங்கு கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.
முதுகெலும்பு இல்லாத சங்கம்: தயாரிப்பாளருக்கு பிரச்சனை வரும் போது தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வந்து யாருக்கும் உதவி செய்வதில்லை. சின்ன படங்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இந்த திரைப்படத்தை வெளியிட தியேட்டர் கொடுக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம். தயாரிப்பாளர் சங்கம் ஒரு முதுகெலும்பு இல்லாத சங்கங்களாக இருக்கிறது. பணத்தை வைத்துக்கொண்டு தலைவர், செயலாளராகிவிடுகின்றனர். ஆனால், எந்த ஒரு பிரச்சனைக்கும் அவர்கள் முன் வந்து பேசுவது இல்லை. இந்த திரைப்படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நான் நேரடியாக இந்த திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவேன். இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.
கார்ப்பரேட் முதலாளிகள்: இந்த திரைப்படத்தில் ஹீரோ ஹீரோயின் இருவருமே புது முகங்கள் அவர்கள் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விடுவோம் அந்த படத்தை தியேட்டரில் பார்க்க மாட்டோமா என ஏக்கத்துடன் காத்து இருக்கின்றனர். அவர்களின் வயிற்று எறிச்சல், பாவம் உங்களை சும்மா விடாது. எங்கிருந்தோ வந்து என் மக்கள் பணத்தை சுரண்டிக் கொழுத்துவிட்டு எம்மையே புறக்கணிக்கும் செயலைச் செய்ய முடிவதெப்படி? பெரிய படங்களுக்கு கொடுக்கும் மரியாதையை சிறிய படங்களுக்கு தராததும் ஒரு நவீன தீண்டாமைதான்.காரணமற்ற காரியங்களில் கவனம் செலுத்தும் இவர்கள் ஏன் கார்ப்பரேட் முதலாளிகளை முறைப்படுத்தவில்லை? அனைவரும் ஒன்று சேர்ந்து போராடாதவரை எதுவுமே நடக்க வாய்ப்பில்லை என சுரேஷ் காமாட்சி ஆதங்கத்துடன் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











