வணங்கான், ஏழு கடல் ஏழு மலை ரிலீஸ் எப்போ தெரியுமா?.. அட தயாரிப்பாளரே தேதி சொல்லிட்டாரே!

சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரகனி, ரோஷினி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வணங்கான் படத்தின் டீசர் நேற்று வெளியானது. அந்த டீசரை பார்த்த பலரும் எப்போ அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வணங்கான் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.

மேலும், அவர் தயாரிப்பில் உருவாகி உள்ள ஏழு கடல் ஏழு மலை படம் எப்போ வெளியாகும் என்கிற கேள்விக்கும் சுரேஷ் காமாட்சி சூப்பர் பதில் அளித்து இருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

Suresh Kamatchi opens up about Vanangaan and Ezhu Kadal Ezhu Malai release date


மாநாடு தயாரிப்பாளர்: கடந்த 2015ல் வெளியான கங்காரு படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுரேஷ் காமாட்சி. 2019ல் வெளியான மிக மிக அவசரம் படத்தை தயாரித்து இயக்கி பல பெண் காவலர்களின் பாராட்டுக்களை பெற்றார் சுரேஷ் காமாட்சி. சிம்புவை வைத்து மாநாடு படத்தை தயாரித்து மிகப்பெரிய அளவில் கல்லா கட்டிய சுரேஷ் காமாட்சி வணங்கான் மற்றும் ஏழு கடல் ஏழு மலை என இரு பெரிய படங்களையும் தயாரித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

விலகிய சூர்யா: பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படம் முதலில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் தான் தொடங்கப்பட்டது. அந்த படத்தில் சூர்யாவும் க்ரித்தி ஷெட்டியும் ஜோடியாக நடித்திருந்தனர். ஆனால், அந்த படம் சில பல பிரச்சனை காரணமாக அப்படியே டிராப் ஆனது. ஆனால், வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகினாலும் அருண் விஜய்யை வைத்து படத்தை எடுப்பேன் என்கிற முடிவில் இருந்த பாலாவுக்கு பணம் போட்டு படம் தயாரிக்க சுரேஷ் காமாட்சி உள்ளே நுழைந்து ஆதரவு கொடுத்தார்.

வணங்கான் ரிலீஸ் எப்போ: ”வலது கையில பெரியார், இடது கையில பிள்ளையார். இந்த ஒரு சீனுக்காகவே இந்தப்படத்தை உடனே பார்க்கத் தோணுது.. காத்திருப்போம்..” என வலைப்பேச்சு சக்திவேல் போட்ட ட்வீட்டை பார்த்த வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வரும் மே மாதம் பார்க்கலாம் என படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏழு கடல் ஏழு மலை எப்போ: ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிவின் பாலி நடித்த ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேள்வி எழுப்ப தேர்தல் முடிந்ததும் வெளியாகும் என அறிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி. இந்த ஆண்டு பேக் டு பேக் நல்ல படங்களை வெளியிட்டு வசூல் அள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X