சிம்புவுக்கு பதில் புளூசட்டை மாறன்.. டக்கென ஷூட்டிங்கை ஆரம்பித்த தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி!

Recommended Video

Simbhu-வுக்கு பதில் Blue Sattai மாறன் | Blue Sattai maran new movie pooja

சென்னை: புளூ சட்டை மாறன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

யூடியூப்பில் சினிமா விமர்சனம் செய்பவர் புளூ சட்டை மாறன். படங்களை விமர்சனம் செய்யும் அவரது ஸ்டைல் மிகவும் பிரபலம். பல படங்களை மோசமாக விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கியிருகிறார்.

அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களில் படங்களை மோசமாக விமர்சித்ததால், அவர்களது ரசிகர்களின் எதிர்ப்புக்கும் ஆளாகியிருக்கிறார். பிரபு தேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தை மிக மோசமாக விமர்சித்தார் புளூ சட்டை மாறன். இதனால் அவர் மீது அப்படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் காவல் துறையில் புகார் அளித்ததும் நிகழ்ந்தது.

விமர்சன ஸ்டைல்

விமர்சன ஸ்டைல்

ஆனால் இதையெல்லாம் தனக்கு கிடைக்கும் பப்ளிசிட்டியாக நினைத்து, தனது வேலைகளை சரியாக செய்து வருகிறார் அவர். ஒரு சில படங்களை மட்டுமே அவர் பாராட்டி இருக்கிறார். அதில் ஒன்று சமீபத்தில் வெளியான ஆர்யாவின் மகாமுனி. பெரும்பாலும் மற்றவர்களின் குறைகளை விமர்சிப்பதே இவரது விமர்சன ஸ்டைல் ஆகும்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

இந்நிலையில், புளூ சட்டை மாறன் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்தப் படத்தில் நரேன், ராதாரவி, ‘வழக்கு எண்' முத்துராமன் தவிர்த்து மீதி அனைவரும் புதுமுகங்களே நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே புதுமுகங்கள்தான். பல படங்களை விமர்சித்ததால் நிச்சயம் யாரும் மோசமாக விமர்சிக்காதபடியான படத்தைத் தான் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.

பாராட்டு வாங்குவேன்

பாராட்டு வாங்குவேன்

பட பூஜையின் போது, ‘படங்களை விமர்சித்தோமே அதனால் ஒரு பயங்கரமான படத்தை எடுத்துவிட வேண்டும் என்கிற சுமையையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் ஒரு நல்ல படம் என்று பாராட்டு வாங்கக்கூடிய ஒரு படத்தை இயக்குவேன்' என ப்ளூசட்டை மாறன் கூறியுள்ளார்.

சிம்புவுக்கு பதில்

சிம்புவுக்கு பதில்

இது ஒருபுறம் இருக்க, இப்படத்திற்கு முன்னர் சுரேஷ் காமாட்சி, சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்குவதாக இருந்தார். வெங்கட் பிரபு இயக்குவதாக இருந்த அப்படம், அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகியும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. சிம்புவின் அலட்சியத்தால் அப்படம் கைவிடப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சிம்புவை தயாரிக்க இருந்த சுரேஷ் காமாட்சி, புளூசட்டை மாறன் படத்தை தயாரிக்க இருப்பது சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X