Don't Miss!
- News ‛‛கடவுளே நான் ஜெயிக்கணும்’’.. ஓட்டுப்போட சென்றதும் இவிஎம் முன்பு தமிழிசை செய்ததை கவனீச்சிங்களா!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அட இது படத்துல இல்லையே...மாநாடு சிங்கிள் ஷாட் சீனை வெளியிட்ட தயாரிப்பாளர்
சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து நவம்பர் 25 ம் தேதி வெளியிடப்பட்ட படம் மாநாடு. அரசியல், த்ரில்லர், டைம் லூப் படமான இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.
எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் அனைவரிடமும் மிகப் பெரிய பாராட்டை பெற்று வருகிறது. ரஜினி துவங்கி அனைத்து பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
அள்ளி குவிக்கும் வசூல்
அதிலும் சிம்பு, எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளி குவித்துள்ளது. தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள மாநாடு படம் உலம் முழுவதும் வரவேற்புடன், வசூலையும் அள்ளி குவித்து வருகிறது. ரிலீசான ஒரு வாரத்திலேயே பிளாக்பஸ்டர் படமாக மாநாடு மாறி உள்ளது.
மாநாடு 2 வருதா
மாநாடு படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் அளித்துள்ள அமோக ஆதரவால் ரிலீசான இரண்டாவது நாளே படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடி அனைவரையும் அசர வைத்தனர். மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து மாநாடு 2 படத்தையும் எடுக்க திட்டமிட்டு வருகிறதாம்.
சிங்கிள் ஷாட் சண்டை
மாநாடு படக்குழுவினர் பாராட்டு மழையில் நனைந்துள்ள இந்த சூழலில் இந்த படத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியின் நீக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி. ரவுடிகளின் இடத்திற்கு வரும் சிம்புவை ரவுகளை தாக்கும் போது, அடுத்தடுத்து சரமாறியாக கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு சிம்பு தாக்குவார்.
|
டெலிடட் சீன் வெளியீடு
மின்னல் வேகத்தில் நடக்கும் இந்த சண்டைக்காட்சி சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டதாம். ஆனால் படத்தின் நீளம் கருதி இந்த சண்டைக்காட்சி சுருக்கப்பட்டதாம். இதில் நீக்கப்பட்ட 24 விநாடிகள் மட்டும் ஓடும் டெலிடட் சிங்கிள் ஷாட் பாட்டில் சண்டைக் காட்சியின் வீடியோவை சுரேஷ் காமாட்சி இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஏன் டெலிட் பண்ணுனீங்க
இந்த வீடியோ லட்சக்கணக்கில் பார்வைகளையும், லைக்குகளையும் அள்ளி குவித்து வருகிறது. பலர் ஆச்சரியத்துடன், இது நிஜமாகவே நீக்கப்பட்ட காட்சிகள் தானா. அதே போன்ற மின்னல் வேக சண்டைக் காட்சியை படத்தில் பார்த்தது போல் உள்ளதே என கேட்டுள்ளனர். இன்னும் சிலர், செமயா இருக்கு. ஸ்பீடும் வேற வெலலா இருக்கு. அப்புறம் ஏன் சார் டெலிட் பண்ணுனீங்க என காரணம் கேட்டுள்ளனர்.
வேற லெவல் ஸ்பீட்
வேற லெவல் ஸ்பீட் சிம்பு. தியேட்டரில் பார்க்கும் போது செம எனர்ஜிடிக்கா இருக்கு சார். சீக்கிரம் பீஜிஎம் வெளியிடுங்க. இந்த சீனை ஏன் டெலிட் செய்தீர்கள். படத்தில் இதையும் சேர்த்திருந்தால் இன்னும் மாஸாக இருந்திருக்கும் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.