twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜோதிகா பேசியது தேவையான பேச்சு.. உங்களுக்கு ஏன் வலிக்கிறது என்றால்..? பிரபல தயாரிப்பாளர் அறிக்கை!

    By
    |

    சென்னை: எந்தக் கோவில்களைப் பற்றியும் அவதூறு செய்யாத வகையில்தான் ஜோதிகா பேசியிருக்கிறார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    ஜோதிகாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. வரிந்து கட்டும் நெட்டிசன்ஸ்!

    நடிகை ஜோதிகா கடந்த சில மாதங்களுக்கு முன், விருது விழா ஒன்றில் பேசிய பேச்சை, சேனல் ஒன்று சமீபத்தில் ஒளிபரப்பியது.

    அதில் அவர் பேசும்போது, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. ஒரு முறை அங்கு ஷூட்டிங் சென்றபோது, கண்டிப்பாக அதைப் பாருங்கள் என்றார்கள். பார்த்தேன். பிரமாண்டமாக இருந்தது. அப்போது எனக்கு அங்குள்ள மருத்துவமனையில் ஷூட்டிங். அங்கு சென்றபோது அது சரியாக பராமரிக்கப்பட்டாமல் இருந்ததைப் பார்த்தேன்.

    நாம் தனித்திருக்கவில்லை.. இந்த பூமித்தாயின் மடியில் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.. பிரியங்கா பதிவு!நாம் தனித்திருக்கவில்லை.. இந்த பூமித்தாயின் மடியில் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.. பிரியங்கா பதிவு!

    எதிர் கருத்து

    எதிர் கருத்து

    கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்யும் தொகையை பள்ளிகளுக்கும் மருத்துவ மனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறியிருந்தார். அந்த வீடியோவின் சில பகுதிகளை வெளியிட்டு, சிலர் ஜோதிகாவின் பேச்சுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வந்தனர். அவர் தஞ்சை பெரிய கோவிலை அவமானப்படுத்தி விட்டதாகக் கூறினர். எஸ்.வி.சேகர் போன்றோரும் அவருக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

    சுரேஷ் காமாட்சி

    சுரேஷ் காமாட்சி

    இதையடுத்து அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இயக்குனர் இரா. சரவணன், ஜோதிகா ஏன் அப்படி பேசினார் என்று விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் சிம்புவின் மாநாடு பட தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி, ஜோதிகாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    மத வியாபாரம்

    மத வியாபாரம்

    'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற பாரதியின் புதுமைப் பெண்ணாகத்தானே நடிகை ஜோதிகா பேசியிருக்கிறார்? எந்தக் கோவில்களைப் பற்றியும் அவதூறு செய்யாத அழுத்தமான தேவையான பேச்சு அது. ஆனால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது என்றால், இவர்கள் கல்வி கற்று அறிவுக்கண் திறந்துவிட்டால் எங்கே நம் மத வியாபாரம் படுத்துவிடுமோ என்கிற பயம்.

    பேராயுதமாகச் செய்வோம்

    பேராயுதமாகச் செய்வோம்

    கல்விதான் வருங்காலத் தலைமுறையின் விடியலுக்கான ஆயுதம். அந்த ஆயுதத்தை வலிமையானதாக உணர்ந்ததால்தான் ஜோதிகா அதைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். அந்த ஆயுதத்தை மொன்னையாக்கியேத் தீருவோம் என்பது உங்கள் போராட்டம் என்றால் கல்வி எங்களின் தலைமுறைக்குத் தேவையான ஆயுதமாக அல்ல, பேராயுதமாகச் செய்வோம் என்பது தமிழர்கள் ஏற்கும் உறுதியாக இருக்க வேண்டும்.

    நிதானமாகக் கவனியுங்கள்

    நிதானமாகக் கவனியுங்கள்

    கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளுக்கு கொண்டு கொட்டுவதைவிட கல்வியை இலவசமாகத் தர, மதம் தாண்டி மனிதர்கள் முன் வரவேண்டும்.
    கோவில்களும் சர்ச்சுகளும் மசூதிகளும் மூடிக்கிடக்கும் இவ்வேளையில்கூட உங்கள் மத அரசியல், எதை நிலை நிறுத்தப் போராடுகிறது?
    ஜோதிகாவின் பேச்சை நிதானமாகக் கவனியுங்கள். கல்வி நிலையங்களுக்கு பணம் தாருங்கள்னு என்று கேட்டதை போய் அரசியல் செய்கிறீர்களே?

    உணர வேண்டாமா?

    உணர வேண்டாமா?

    நீங்கள் இப்படி வெறுப்பை உமிழ உமிழ, மத வெறியைக் கொட்டக் கொட்ட, நாம் சார்ந்திருக்கும் மதத்தின் மீது நமக்கே வெறுப்பு ஏற்பட்டுவிடக்கூடும். சம்பாதிப்பதில் ஒரு பகுதியை கல்விக்காக செலவு செய்துகொண்டிருப்பவர்கள், அவர்கள். எத்தனையோ குடும்பங்களுக்குப் படிப்பின் மூலம் விளக்கேற்றி வைத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் செய்வதை வைத்தாவது அவர்கள் மத நோக்கில் பேசியிருக்க மாட்டார்கள் என உணர வேண்டாமா?

    சமூக மாற்றங்கள்

    சமூக மாற்றங்கள்

    ஜோதிகா, நீங்கள் துணிந்து நில்லுங்கள். உங்கள் படங்களில் பேசப்படும் பெண்ணியம் இங்கும் தலை நிமிர்ந்து நிற்கட்டும். உங்கள் பேச்சைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ளும்வரைக் காத்திருங்கள். சமூக மாற்றங்கள் ஒரே இரவில் நிகழ்ந்து விடாது. அது படிப்படியாகக் கல்வியை பெற்றுக் கொள்வதில் இருக்கிறது என்ற உங்கள் கருத்தை, ஏற்கிறேன்.
    இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    Producer Suresh Kamatchi supports actress Jyothika speech about education
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X