Vetrimaaran - வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் படம் மிஸ்ஸானது.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஷேரிங்ஸ்

சென்னை: இந்திய திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநராக இருக்கிறார் வெற்றிமாறன். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் இதுவரை ஆறு படங்கள் இயக்கியிருக்கிறார். ஆறு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. மேலும் இரண்டு படங்களுக்கு தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தற்போது அவரது இயக்கத்தில் விடுதலை 2 உருவாகிவருகிறது. அடுத்ததாக வாடிவாசல் உருவாகவிருக்கிறது.

இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். குறிப்பாக தான் இயக்கும் ஒவ்வொரு படத்தின் மூலமும் சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பும் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் படம் பஞ்சமி நிலம் பற்றிய விவாதத்தை கிளப்பியது.

Suresh Kamatchi Talks about Vetrimaaran Simbu Movie

தவறாக சித்தரித்த வெற்றிமாறன்?: அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.

விடுதலை: தொடர்ந்து அவர் இயக்கிய அசுரன் படமும் தேசிய விருதை பெற்றது. அதனையடுத்து விடுதலை படத்தை இயக்கினார். இதற்கிடையே வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்ட ப்ளானில் மாற்றம் ஏற்பட விடுதலை படமானது இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

விடுதலை 2: இந்தச் சூழலில் விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தாலும் பாகம் ஒன்று பெற்ற விமர்சனம் இதில் வரக்கூடாது என்பதற்காக படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்குகிறார் வெற்றி. அதற்கான வேலைகள் மும்முரமடைந்துள்ளன. இதில் விஜய் சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. அடுத்ததாக வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களை இயக்குகிறார் வெற்றிமாறன்.

Suresh Kamatchi Talks about Vetrimaaran Simbu Movie

வெற்றிமாறன் - சிம்பு கூட்டணி: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து மெகா ஹிட் திரைப்படமான வடசென்னை படத்தில் முதலில் சிம்புதான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அதிலிருந்து சிம்பு வெளியேறினார். இது அப்போது பெரும் டாபிக்காக இருந்தது. அதனையடுத்து இரண்டு பேருமே இணையவில்லை. எப்படியாவது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்துவிட வேண்டும் என்று எஸ்டிஆர் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது முறையும் மிஸ்ஸிங்: இந்நிலையில் வெற்றிமாறன் - சிம்பு கூட்டணி இரண்டாவது முறையும் மிஸ்ஸானது பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில், "சிம்புவும் - வெங்கட் பிரபுவும் இணைந்த மாநாடு திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்த சமயத்தில் முதலில் சிம்புவின் தேதி கிடைத்தபோது அவரையும், வெற்றிமாறனையும் வைத்து ஒரு படம் எடுப்பதாகத்தான் இருந்தது. அதற்காக வெற்றிமாறன் சிம்புவிடம் கதை சொல்லி ஓகேயும் வாங்கிவிட்டார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்தப் படம் ஆரம்பிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X