twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பதா… தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்!

    |

    சென்னை : உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை என்று மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

    சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் நவம்பர் 25ந் தேதி வெளியாக உள்ளது.

    அபிநய் கட்டிய மனக்கோட்டை தகர்ந்தது… இந்த வாரமும் நாமினேஷனில் வருவாரா ?அபிநய் கட்டிய மனக்கோட்டை தகர்ந்தது… இந்த வாரமும் நாமினேஷனில் வருவாரா ?

    திரையரங்குக்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    கட்டாய தடுப்பூசி

    கட்டாய தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள், திரையரங்குகள், இதர பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த புதிய உத்தரவால் தடுப்பூசி போடாதவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    மனித உரிமை மீறல்??

    மனித உரிமை மீறல்??

    தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்! என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    வசூல் பாதிக்குமோ

    வசூல் பாதிக்குமோ

    மாநாடு திரைப்படம் 25ந் தேதி வெளியாக உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு படத்தின் வசூலிலை பெரும் அளவில் பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மாநாடு திரைப்படத்தை தொடங்கியது முதலே ஏதோ ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது. பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    சிம்பு ரசிகர்கள் கவலை

    சிம்பு ரசிகர்கள் கவலை

    தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியானதால் மாநாடு 25ந் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. நவம்பர் 1ந் தேதி திரையரங்குக்கு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்த நிலையில், தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது, திரையரங்கில் கூட்டம் குவிந்தன. அப்போது எல்லாம் இந்த சட்டத்தை போடாமல் இப்போது போடுவது சிம்பு ரசிகர்களை கவலை அடையச்செய்துள்ளது.

    English summary
    Maanaadu producer Suresh Kamatchi Tweet About corona vaccine
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X