பாட்ஷா படத்தின் போது ரஜினி சொன்ன வார்த்தையால் முகம் மாறிய தேவா.. மனம் திறந்த சுரேஷ் கிருஷ்ணா!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்டாக அப்பவே பாட்ஷா படத்தை கொடுத்து மாஸ் காட்டியவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. பாட்ஷா படத்தின் பாடல்களையும் இசையமைப்பாளர் தேவா மெகா பிளாக்பஸ்டர் பாடல்களாகவே கொடுத்திருந்தார்.
நான் ஆட்டோக்காரன், ஸ்டைலு ஸ்டைலு தான், நீ நடந்தால் நடையழகு, தங்கமகன் இங்கு சிங்கநடை போட்டு, பாட்ஷா பாரு, ரா ரா ரமைய்யா என அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள்.

இந்நிலையில், இந்த படத்தில் இருந்து ஒரு சூப்பர் ஹிட் பாடலை வேண்டவே வேண்டாம் என ரஜினிகாந்த் சொல்ல இசையமைப்பாளர் தேவா முகமே வாடிப்போய் விட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ஓபானாக பேசி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
பெயரை போலவே மிரட்டிய படம்: பாட்ஷா படம் இந்த சன் டே சன் டிவியில் போட்டாலும் அதுதான் டிஆர்பியில் தெறிக்கும் அளவுக்கு இத்தனை ஆண்டுகளாக பெயரை போலவே பாட்ஷாவாகவே அந்த படம் மாஸ் காட்டி வருகிறது.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் பல ஹீரோக்களுக்கு மாஸா ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசையை விதைத்ததே பாட்ஷா தான்.
தெறிக்கவிட்ட தேவா: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ரகுவரன், நக்மா என நட்சத்திரங்கள் ஒரு பக்கம் ஸ்கோர் செய்ய ஒட்டுமொத்த படத்தையும் தனது பின்னணி இசை மற்றும் பாடல்களால் தூக்கி நிறுத்தி தெறிக்கவிட்டு இருப்பார் தேனிசை தென்றல் தேவா.
எல்லா பாடல்களுமே அப்படியொரு ஹிட். இன்றைக்கு கேட்டால் கூட எந்தவொரு குறையும் சொல்லாத அளவுக்கு வியக்க வைக்கக் கூடிய பாடல்களை போட்டிருப்பார்.

அழகு பாடலுக்கு ஆப்பு: ஆனால், பாட்ஷா படத்தில் கமலை விட அதிக கெட்டப்புகளி ரஜினிகாந்த் தோன்றிய "நீ நடந்தால் நடையழகு" பாடலை படத்தில் இருந்து தூக்கி விடலாம். வெறும் கேசட்டில் மட்டும் பாடல் இருக்கட்டும். ஏற்கனவே 2 டூயட் இருக்கிறது. இது கேங்ஸ்டர் படம் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் உள்ளன எனக் கூற ரஜினியை ரசித்து ரசித்து அந்த பாடலை உருவாக்கிய தேவாவின் முகம் ஃபியூஸ் போன பல்பு போல அப்படியே சுருங்கிப் போய்விட்டதாம்.
ரஜினிக்கே பிடித்துப் போய் விட்டது: அதை பார்த்த சுரேஷ் கிருஷ்ணா, ஒரு சின்ன வாக் போயிட்டு வரேன் என சொல்லிவிட்டு அந்த பாடலுக்கான விஷுவல் சிச்சுவேஷனை யோசித்து விட்டு ரஜினியிடம் ஜிம்முக்கு போறீங்க, வெளியே வந்து பார்த்தால் செக்யூரிட்டி நிக்கிறாரு என சொல்ல, அடுத்த அடுத்த சிச்சுவேஷன்களை ரஜினியே சொல்ல பஸ்ஸில் இருந்து கண்டக்ரராக இறங்குவது, மந்திரம் ஓதும் ஐயராக வருவது, ரவுடியாக வருவது என ரஜினியே சீன்களை க்ரீயேட் செய்ய அந்த பாடல் கடைசியில் படத்தில் இடம்பெற்று பெரிய வெற்றியை பெற்றது என சுரேஷ் கிருஷ்ணா அந்த பேட்டியில் கூறினார்.


Click it and Unblock the Notifications











