அனைத்து மொழிகளுக்கான மாநாடு ரீமேக் உரிமை....கைப்பற்றிய முன்னணி நிறுவனம்
சென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் மாநாடு.
இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில் படத்தின் அனைத்து மொழிகளுக்கான ரீமேக் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மாநாடு படம்
நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த நவம்பர் 25ம் தேதி வெளியான படம் மாநாடு. டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்தது.

ரூ.100 கோடி க்ளப்
திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பான வெற்றியை பெற்று 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது. மன்மதன் படத்திற்கு பிறகு சிம்புவிற்கு ஏற்றத்தை கொடுத்த படமாகவும் அமைந்தது.

வெங்கட் பிரபு அறிவிப்பு
முன்னதாக தீபாவளி பந்தயத்தில் இருந்த இந்தப் படம் பின்பு பின்வாங்கி, அந்த மாதத்தின் இறுதியில் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் ரிலீஸ் தள்ளிப் போனாலும் சிறப்பான படமாக அமைந்தது. இதையடுத்து படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கவுள்ளதாக படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.

நல்ல வசூலை பெற்றுத் தந்த படம்
படம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. நல்ல வசூலை பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக ஓடிடி ரிலீஸ் என்று வசூல்மழையை பொழிந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அனைத்து மொழிகளின் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தற்போது கைப்பற்றியுள்ளது.

ரீமேக் உரிமை
தெலுங்கில் முன்னணி நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநாடு படத்தின் ரீமேக் உரிமைக்காக பல நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், தற்போது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Recommended Video

உறுதிப்படுத்திய சுரேஷ் புரொடக்ஷன்ஸ்
மேலும் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையையும் அந்நிறுவனம் வசப்படுத்தியுள்ளது. இதை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப் படுத்தியுள்ளது. தமிழில் அதிரி புதிரி வெற்றியை பெற்றுள்ள மாநாடு படம் மற்ற மொழிகளில் ரீமேக்காக உள்ளது சிறப்பான செய்தியாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











