twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் ரசித்து பார்த்த படம்...சுரேஷ் ரெய்னா பாராட்டிய மெகாஹிட் படம்

    |

    சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 5வது சீசன் சமீபத்தில் துவங்கியது. இதன் துவக்க நாள் விளையாட்டின் போது கமெண்ட்ரி செய்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படிருந்தார்.

    பேண்ட் போட மறந்து.. ரோட்டுக்கு வந்து நின்ற யாஷிகா ஆனந்த்.. ஓடி வந்த ரசிகர்கள்! பேண்ட் போட மறந்து.. ரோட்டுக்கு வந்து நின்ற யாஷிகா ஆனந்த்.. ஓடி வந்த ரசிகர்கள்!

    அப்போது தான் விஜய் நடித்த மெகா ஹிட் படமான மாஸ்டர் படத்தை ஆஹா...ஓஹோ என பாராட்டினார் சுரேஷ் ரெய்னா. மாஸ்டர் படத்தின் இந்தி டப்பிங்கை தானும் தனது மகளும் பார்த்ததாக கூறினார் ரெய்னா. ரெய்னாவின் இந்த பேட்டி வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    ரெய்னாவை கவர்ந்த மாஸ்டர்

    ரெய்னாவை கவர்ந்த மாஸ்டர்

    இது பற்றி அவர் கூறுகையில். விஜய்யின் மாஸ்டர் படத்தை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். எனக்கும் என் மகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது என்றார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரெய்னா.

    செப்டம்பரில் ஐபிஎல்

    செப்டம்பரில் ஐபிஎல்

    இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ம் தேதி துவங்கி அக்டோபர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சுரேஷ் ரெய்னா விளையாட உள்ளார்.

    ரெய்னாவை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

    ரெய்னாவை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

    ஏற்கனவே மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலர் தோளை குலுக்கி நடனம் ஆடி, அந்த வீடியோவை வைரலாக்கினர். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா மாஸ்டர் படத்தை பாராட்டியதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தாமதமான மாஸ்டர் ரிலீஸ்

    தாமதமான மாஸ்டர் ரிலீஸ்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ம் தேதியே ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் கொரோனா பரவலால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.

    English summary
    Chennai Super Kings batsman Suresh Raina, who was invited to join the commentary during the opening game of the fifth season of Tamil Nadu Premier League (TNPL), revealed that he watched Vijay's Master in Hindi (dubbed) along with his daughter and that they both loved the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X