என் பயோபிக்கில் சூர்யா நடித்தால் பொருத்தமாக இருக்கும்…பிரபல கிரிக்கெட் வீரர் தகவல்!
சென்னை : என் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
பயோபிக் குறித்து தொகுப்பாளரின் கேள்விக்கு சுரேஷ் ரெய்னா இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

வெற்றி பெறுகிறது
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்படுவதும், அவை நல்ல வரவேற்பை பெற்று வருவதும் தெரிந்ததே.

வெற்றியை பெற்றது
அந்த வகையில் எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர், மேரிகோம், மிகா சிங்,சாய்னா நேவல்,கர்ணம் மல்லேஸ்வரி உள்பட பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது.

சுஷாந்த் சிங்
டோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சுஷாந்த் சிங் டோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதேபோல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமும் அனைவரின் பாராட்டை பெற்றது. இதில்,சாய்னா நேவாலாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தார்.

ஃபேவரைட் ஹீரோ சூர்யா
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சுரேஷ் ரெய்னாவிடம் ஒரு தொகுப்பாளர், உங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் அதில், யார் நடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள் என்று கேட்டுள்ளார். உடனே சுரேஷ் ரெய்னா, என் ஃபேவரைட் ஹீரோ சூர்யா தான். அவரால் என் கதாபாத்திரத்தில் நிச்சயம் நடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











