சுஷாந்த் மரணத்தில் நிச்சயம் உண்மை வெளியே வரும்.. பிரபல கிரிக்கெட் வீரர் உருக்கமான போஸ்ட்!
சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து தல தோனி எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்ற நிலையில், சின்ன தல சுரேஷ் ரெய்னா உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
கடந்த ஜூன் 14ம் தேதி உயிரிழந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ரியா தரப்பு
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்தியின் வழக்கறிஞர்கள் பீகார் போலீசாருக்கு செய்தது போலவே சிபிஐ அதிகாரிகளுக்கும் உரிய ஒத்துழைப்பு அளிக்காமல் உள்ளதாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ரூம் மேட் பித்தானியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

சின்ன தல
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தல தோனி இதுவரை சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து ஏதும் தெரிவிக்காத நிலையில், சுரேஷ் ரெய்னாவின் இந்த கருத்துக்கு சுஷாந்த் ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

நிச்சயம் நீதி கிடைக்கும்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் புகைப்படத்தை வைத்து, பாலிவுட் பாடல் ஒன்று ஒலிக்க, மிகவும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கிரிக்கெட் வீரர் ரெய்னா, இந்திய அரசையும் அதன் நீதித்துறையையும் தான் முழுமையாக நம்புவதாகவும், நிச்சயம் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு நீதி கிடைக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். #GlobalPrayersforSSR #JusticeforSSR என்ற ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு பிரதமர் மோடிக்கும் டேக் செய்துள்ளார். சுதந்திர தினத்தன்று தோனியுடன் சேர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தோனியாக
2016ம் ஆண்டு சுஷாந்த் சிங் நடிப்பில் கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவான அந்த படத்தில் தோனியாக சுஷாந்த் நடித்திருந்த போது, தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியினருடன் மிகவும் நட்பாக சுஷாந்த் பழகி வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











