நீ யாருடா என் மண்டையில அடிக்கிறது.. சுரேஷை கண்டபடி திட்டித் தீர்த்த சனம்.. மன்னிப்பு கேட்ட சுரேஷ்!

சென்னை: புரமோவில் பார்த்த அந்த பயங்கரமான சண்டை காட்சிகள் எந்த ஒரு ஏமாற்று எடிட்டிங் வேலையும் இல்லாமல் பக்காவாக அரங்கேறி ரசிகர்களுக்கு செம தீனி போட்டது.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 | Promo 3 | Day 17

பிக் பாஸ் புரமோவில் ஒரு மாதிரியும், நிகழ்ச்சியில் வேறு மாதிரியும் காட்டுவது போல் இல்லாமல், இந்த முறை சனம் ஷெட்டியை சுரேஷ் அடித்ததும், அதற்காக அவரை வெளிய வாடா என சனம் திட்டியதும் அப்படியே இருந்தது.

இது போதும் டா இன்னைக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் எகிற என பிக் பாஸ் போட்ட கணக்கு கொஞ்சம் கூட தப்பவில்லை.

வில்லங்கமான விளையாட்டு

வில்லங்கமான விளையாட்டு

ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ ராஜின் நரித் தந்திரம் இன்றைய போட்டியில் நல்லாவே தெரிந்தது. கேமை கேமா விளையாடணும்னு பிளான் போட்டாலும், அதை எக்ஸ்க்யூட் பண்ற பாலாஜியும், சோம்ஸும் ரொம்பவே சொதப்பி, எதிர்பார்த்த படியே ஏகப்பட்ட கச்சேரிகளை ஆரம்பித்து விட்டனர். விளையாட்டு வில்லங்கமாக மாறிடுச்சு.

அடிச்சு விளையாடிய தாத்தா

அடிச்சு விளையாடிய தாத்தா

பேய்களை எல்லாம் விரட்டுகிறேன் என்கிற பேர் வழியில், நிஷாவை, ரம்யா பாண்டியனை எல்லாம் மொட்டை தல சுரேஷ் அடித்தார். கடைசியாக, சனம் ஷெட்டியின் தலையிலேயே செங்கோலை வைத்து அடித்த நிலையில், ஆரம்பமானது பெரிய பஞ்சாயத்து. வாடா போடா என வயசுக்கு கொஞ்சமும் மரியாதை கொடுக்காம சனம் வச்சு விளாசி விட்டார்.

சூடு சொரணையே இல்லை

சூடு சொரணையே இல்லை

சுரேஷ் சக்கரவர்த்தி அனிதாவுடன் சின்ன சண்டை வரும் போது, உப்புப் போட்டு சாப்பிடுறவன் அந்த டீம்ல இருக்க மாட்டான்னு வீர வசனம் எல்லாம் பேசினாரு, ஆனால், சனம் ஷெட்டியை அடித்து நல்லா அசிங்க அசிங்கமா திட்டு வாங்கிட்டு, கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லாமல், நான் சும்மா விளையாடினேன், நிஷாவை விளக்கமாத்தாலலாம் அடிச்சேன் கேட்டுப் பாருங்க என பம்மினார்.

அதட்டிய அர்ச்சனா

அதட்டிய அர்ச்சனா

கண்ணுல பட்டு கண்ணு கிண்ணு போயிருந்தா, டேய் வெளிய வாடா என் தலையில ஏன் டா அடிச்ச என சனம் ஷெட்டி பேசுறதை எல்லாம் சுரேஷ் ஃபேமிலி பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள். சுரேஷ் சக்கரவர்த்தியை ஆரம்பத்தில் இருந்தே அடக்கி வாசிக்க சொன்ன அர்ச்சனா இந்த சம்பவத்தால் ரொம்பவே டென்ஷனாகி சுரேஷை அதட்டி மன்னிப்பு கேட்க சொன்னார்.

மன்னிப்பு கேட்ட சுரேஷ்

மன்னிப்பு கேட்ட சுரேஷ்

பிக் பாஸ் நான் சும்மா விளையாடினேன், வேணும் என்று பண்ணல என கேமராவுக்கு முன்பாக மன்னிப்பு கேட்டார் சுரேஷ். தாத்தா உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லை என பாலாஜி, சுரேஷை கேவலமாக பேசி சனம் ஷெட்டிக்கு புதுசா சப்போர்ட் பண்ணார். அர்ச்சனாவின் டார்ச்சர் தாங்க முடியாமல், வெளியே வந்த சுரேஷ், நிஷா, ரம்யா மற்றும் சனம் ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்டார்.

தலையில் அடித்து சத்தியம்

தலையில் அடித்து சத்தியம்

அதோட விடாத அர்ச்சனா, கொஞ்சம் ஓவராவே வாங்குன காசுக்கு மேல கூவினாங்க, மனசார நீங்க மன்னிப்பு கேட்கிறீங்களா எனக் கேட்டதும், கேடி மொட்டை, தன் தலையில அடிச்சி சத்யம் பண்ணாம, கேட்ட அர்ச்சனா அக்கா தலையிலேயே அடிச்சி சத்தியம் பண்ணி மன்னிப்பு கேட்டாரு, உள்ளார மனுஷன் கொஞ்சமில்ல ரொம்பவே ஆடிப் போயிட்டார்.

சண்டை சால்வ்

சண்டை சால்வ்

சனம் ஷெட்டி வாடா போடா என சுரேஷை பார்த்து பேசியதை யாருமே கண்டிக்கல.. எல்லாருமே சுரேஷை மட்டுமே டார்கெட் பண்ணி மன்னிப்பு கேட்க வைத்தனர். பதிலுக்கு சுரேஷும் எகிறி சண்டை போட்டு இருந்தா, சுரேஷ் தாத்தா ஆர்மியினருக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கும், அப்படி பண்ணாம இந்த சண்டையை அப்படியே பிக்பாஸ் சால்வ் பண்ணிட்டாரு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X